news-details
தமிழக செய்திகள்
அன்னையின் அளவிடமுடியாத அன்பும் அரவணைப்பும் (பசிலிக்கா அதிபர் & பங்குத்தந்தையின் வாழ்த்துச் செய்தி)

கோவை மறைமாவட்டத்தில் புனித செபமாலை அன்னை பசிலிக்கா தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாகும். இந்தப் பசிலிக்காவின் வரலாறு 386 ஆண்டுகள் கொண்டதாகும். இங்கு வரும் இறைமக்கள் கண்ணீர், வேதனை, நோய் நீங்கி இறை இயேசுவின் வழியாக அன்னையின் பரிந்துரையில் ஏராளமான நன்மைகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

அன்னையின் அளவிடமுடியாத அன்பும் அரவணைப்பும் ஒவ்வொரு மனிதனையும் நல்வழியில் நடத்துகின்றது. புனித செபமாலை அன்னையின் தேர்த்திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி முதல் ஞாயிறன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

இறைமக்கள் அனைவரும் இவ்விழாவில் ஏராளமாகக் கலந்துகொண்டு இறைமகன் வழியாக அன்னையின் அருளைப் பெற்றுச் செல்ல எம் மறைமாவட்ட மேதகு ஆயர், முதன்மைக்குரு, அருள்தந்தையர்கள், இருபால் துறவியர்கள் மற்றும் எம் பங்கு மக்களோடு இணைந்து இறைவனின் ஆசிர் பெற அன்புடன் அழைக்கின்றேன். அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!

அருள்பணி. K. அருண், பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, கருமத்தம்பட்டி