news-details
உலக செய்திகள்
“ஆன்லைன் செல்வாக்கை கிறித்தவச் சாட்சியமாக மாற்றவேண்டும்”

இணையவழிச் செல்வாக்கை உண்மையான கிறித்தவச் சாட்சியமாக மாற்றும் நோக்கில், முதன்மை ஆசியக் கத்தோலிக்க டிஜிட்டல் மறைபரப்பாளர்கள் மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் நிறைவடைந்தது. செப்டம்பர் 10 முதல் 13 வரைரேடியோ வெரித்தாஸ் ஆசியாவளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில், ஆசியா முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க இணைய ஊடகவியலாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்றனர். ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC-OSC) மற்றும் வத்திக்கான் தகவல் தொடர்பு ஆணையமும் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன. “டிஜிட்டல் படைப்புகளில் இயேசுவின் உண்மையான சாட்சிகளாக வளரவேண்டும்என்று திருத்தந்தை  லியோ தனது வாழ்த்துச் செய்தியில் ஊக்கப்படுத்தியதைத் தொடர்ந்து, திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் கில்பர்ட் கார்செரா, மக்களுடன் இணைந்து பயணித்து இயேசுவின் அன்பை உணர்த்துவதே உண்மையான ஊடகப்பணி என்றார்.