news-details
வத்திக்கான் செய்திகள்
திரு அவைக்கு நற்கருணை ஆன்மிகம் தேவை! திருத்தந்தை வலியுறுத்தல்!

அண்மையில்தூய  நற்கருணையின் ஆராதனைச் சகோதரிகள்(The Perpetual Adorers of the Most Blessed Sacrament, known as the Sacramentine Nuns) அமைப்பின் பிரதிநிதிகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை லியோ, “திரு அவையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அன்பும் இறைநம்பிக்கையும் நிறைந்தநற்கருணை ஆன்மிகம்மிகவும் அவசியமானதுஎன்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “அப்பத்தின் வடிவில் தம்மையே நமக்களித்த இறைவனைத் தொடர்ந்து ஆராதிக்கும் அவர்களின் பணி, மனித இதயங்களில் இறைவனைக் காண்பதற்கான ஏக்கத்தை நிறைவு செய்கிறதுஎன்றும் புகழாரம் சூட்டினார். புனித அசிசியாரின் போதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நற்கருணையும் திராட்சை இரசமும் நம்பிக்கையாளர்களின் ஒற்றுமையின் அடையாளம் என்றார். செபம், உழைப்பு மற்றும் சகோதரத்துவப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் திரு அவையில் அன்பையும் ஒற்றுமையையும் வழங்கும் இணைப்பாளர்களாக இக்கன்னியர் திகழவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை லியோ, நற்செய்தியின் போதனைகளுக்கு உண்மையோடு வாழ்ந்து புனித பாதையில் தொடர அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.