ஐ.நா. சபையின் 81-வது பொது அவைக் கூட்டத்தில் வத்திக்கான் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் உரையாற்றினார். “போர்களை உடனடியாக நிறுத்தவேண்டும்; பலவந்தமான அதிகாரப் போக்கைக் கைவிட்டு, பேச்சு வார்த்தைப் பண்பாட்டை வளர்க்கவேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் மனித கண்ணியமும் பொறுப்பும் முதன்மையாக இருக்கவேண்டும். தன்னாட்சி கொண்ட கொடிய ஆயுதங்களின் பயன்பாடு மனிதக் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும். உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த முழுமையான போர்நிறுத்தம் தேவை. காசா மற்றும் மேற்குக் கரையில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளுக்குத் தீர்வாக இரு-நாட்டு கொள்கை வழியே நிலையான அமைதியை ஏற்படுத்தவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உலகளவில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, மீண்டும் பலதரப்பு உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வலியுறுத்தினார்.