news-details
வத்திக்கான் செய்திகள்
“AI மனித கண்ணியத்திற்கும் அமைதிக்கும் பணியாற்றவேண்டும்”- திருத்தந்தை லியோ

“செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது ஞானம் மற்றும் அன்பினால் வழிநடத்தப்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்திற்கும் உலக அமைதிக்கும் பணியாற்றவேண்டும். மோதல்களும் பிரிவினைகளும் நிறைந்த இன்றைய உலகில், தொழில்நுட்பப் புதுமைகள் பொதுநலனுக்காகப் பயன்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்” என்ற திருத்தந்தை, ‘மகத்தான மானுடம்’ (Magnifica humanitas)  என்ற தனது சுற்றுமடலை மேற்கோள்காட்டினார். “டிஜிட்டல் யுகத்தில் நற்செய்தியின்படி வாழ்வதற்கு இறைவனின் இரக்கமுள்ள திட்டமே வழிகாட்டியாக அமைகிறது. மக்களிடையே உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் அமைதிக்கான கருவிகளாக மாறவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.