“மரண தண்டனை மனித கண்ணியத்திற்கு எதிரானது”- திருத்தந்தை லியோ
மரண தண்டனை என்பது மனிதனின் புனிதத்தன்மைக்கும் கண்ணியத்திற்கும் எதிரான தாக்குதல் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருத்தந்தை லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தனது ‘X\'
பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை நாடாமலேயே சமூகப் பாதுகாப்பையும் நீதியின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றார். அமெரிக்காவில் ஃபார்ட் ஹூட் பகுதியில் 13 பேரைக் கொன்ற குற்றவாளி நிடால் ஹசனுக்கு, டிசம்பர் 3, 2026 அன்று துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திருத்தந்தையின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த மரண தண்டனைத் திட்டத்திற்கு வத்திக்கானின் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மரணத்தை ஒரு பொதுக் காட்சியாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும் கர்தினால் பியத்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.