news-details
உலக செய்திகள்
துப்பாக்கிச்சூடு படைப்பிரிவிலிருந்து விலக கத்தோலிக்க வீரர்களுக்கு அமெரிக்கப் பேராயர் உத்தரவு!

டெக்சாஸ் ஃபோர்ட் ஹூட் துப்பாக்கிச்சூடு வழக்கில் 13 பேரைக் கொன்ற நிடால் மாலிக் ஹாசனுக்கு, துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவப் பணிகளுக்கான  பேராயர் தீமோதி புரோக்லியோ, “மரண தண்டனை மற்றும் அதை நேரலை செய்வது திரு அவையின்  போதனைகளுக்கும் மனித கண்ணியத்திற்கும் எதிரானது. இந்தத் தண்டனையை நிறைவேற்றும் துப்பாக்கிச்சூடு படைப்பிரிவில் (firing squad) நியமிக்கப்படும் கத்தோலிக்கப் படைவீரர்கள், தங்களை அந்தப் பணியிலிருந்து விலக்கிக் கொள்ளக் கோருவதை ஒரு கடமையாகவே மேற்கொள்ளவேண்டும்” என்று பேராயர் வலியுறுத்தியுள்ளார்.