“இறைவேண்டல் என்பது பிறரன்பின் அடித்தளம். அது இறைவனுடனான உறவை வலுப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அன்பைப் பெறுவதற்கான வழியாக அமைகிறது.”
அக். 12, உரோம் நகரின் ‘புனித பேதுரு வட்டம் ‘ உறுப்பினர்களுடன்...
“அதிகாரத்தைவிட சேவைக்கும், தனிப்பட்ட இலாபத்தைவிட வெளிப்படைத்தன்மைக்கும், தனிப்பட்ட வெற்றியைவிட மேய்ப்புப் பணிக்கும் திரு அவை முன்னுரிமை அளிக்கவேண்டும்.”
அக். 10, அந்தியோக் கிரேக்க மெல்கைட் திரு அவை ஆயர் பேரவையினருடன்...
“கலை என்பது வெறும் அழகு சார்ந்தது மட்டுமல்ல; மாறாக, நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் மனிதகுலத்தின் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரு கருவி.”
அக். 10, பிஸோட் குழுவின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்துபோது...
“மரண தண்டனை என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் மீறப்பட முடியாத தன்மைக்கும் மனித மாண்பிற்கும் எதிரான தாக்குதல்.”
அக். 10, மரண தண்டனைக்கு எதிரான உலக நாள், ‘எக்ஸ்’ வலைதளப் பதிவு
“கிறித்தவ மகிழ்ச்சி உலகின் மீட்பிற்காக இறைவன் அளிக்கும் கொடை. தவறான புரிதல்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும்.”
அக். 11, மூவேளை இறைவேண்டல், புனித பேதுரு பெருங்கோவில் வளாகம்