உங்களுக்கு மறக்கத்
தெரியுமா?
இந்தக் கேள்வி நம்முடைய வழக்கமான வாசக நண்பர்களைக்கூடக் கொஞ்சம் குழப்பிவிடக்கூடும்; சிலர் கோபப்படவும் கூடும்.
‘இதென்ன கேள்வி! அவனவன் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள என்னென்னவோ பாடுபடுகிறான். அதற்கான வழிகளைத் தேடுகிறான்.’
மறதிதானே
நினைவாற்றலுக்குக் குறுக்கே வந்து தொலைக்கிறது. மறதிதான் தானாக வந்து தொற்றிக் கொள்கிறதே! எத்தனை முறை படித்தாலும் மறந்து போகிறதே! சரியான நேரத்தில் நினைவுபடுத்திக்கொள்ள முடியாமல் தவியாய்த் தவிக்கிறோமே!
நினைவும்
ஒரு வாழ்க்கைத் திறன்தான் (life skill) மறதியும் அதேபோல் ஓர் அவசியமான வாழ்க்கை உத்திதான்.
நினைவாற்றல்
இல்லாதவர்களும் அவதிப்படுகிறார்கள். மறக்கத் தெரியாதவர்களும் அதேபோல் அவதிப்படுகிறார்கள். சில வேளைகளில் அதிகமாகவே அவதிப்படுகிறார்கள்.
நினைவாற்றல்
நம்முடைய அறியும் திறன்களை (Cognitive
skills) வளர்த்துக்கொள்ளத்
துணை செய்கிறது. மறக்கும் திறமை நம்முடைய உணர்வுப் பக்குவத்தை (Emotional
skills) வளர்த்துக்கொண்டு
முன்னேறத் துணை நிற்கிறது.
‘மறக்கத் தெரியாதா?’ என்ற கவிதை வரிகள் கவிஞர் கண்ணதாசனுடையவை. நினைவுக்கு வருகிறதா?
‘நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு
மறக்கத்
தெரியாதா?’
அவருடைய
மற்றொரு பாடல் வரியையும் நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம்
கேட்பேன்
நினைத்து
வாழ ஒன்று
மறந்து
வாழ ஒன்று’
இறைவன்
நமக்கு இரண்டு மனங்களைத் தரவில்லை; ஆனால், ஒரே மனத்தில் நினைத்து வாழவும் வழிகாட்டி இருக்கிறார்; மறந்து வாழவும் வழிகாட்டி இருக்கிறார்.
மறந்து
வாழும் வழிகளைப் பற்றித் தொடர்ந்து சிந்திப்போம், தெரிந்து கொள்வோம், வாருங்கள்!