news-details
உலக செய்திகள்
இரவல் வாங்கி திரு அவைக்கு 40 கோடி நன்கொடை அளித்தவருக்குப் புனிதர் பட்டம்!

பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் உள்ள புனித அலெக்சாண்டர் நெவ்ஸ்கி பேராலய வாசலில் இரவல் வாங்கி திரு அவை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 41 கோடி) வரை நன்கொடை அளித்த டோப்ரி டோப்ரெவ் என்ற முதியவரின் புனித வாழ்வு பல்கேரிய மக்களிடையே இன்றும் போற்றப்பட்டு வருகிறது. காது கேட்கும் திறனை இழந்த டோப்ரி, 86-வது வயதில் சொத்துகள் அனைத்தையும் திரு அவைக்குத் தானமாக வழங்கிவிட்டு, 20 கி.மீ. நடந்து சென்று தினந்தோறும் பிச்சையெடுக்கத் தொடங்கினார். தான் பெற்ற சிறிய நாணயங்களைச் சேமித்து, ஆலயங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக வழங்கினார். மாதம் 95 டாலர் ஓய்வூதியத்தில், எளிய வாழ்வு வாழ்ந்த இவரைச் சோபியா செய்தி நிறுவனம் 2013-இல் ‘ஆண்டின் சிறந்த ஆளுமை’ எனப் பாராட்டியது. 2018-இல் தனது 103-ஆவது வயதில் காலமான இவருக்குப் பல்கேரியாவில் 10 மாடி உயரச் சுவர் ஓவியம் வரையப்பட்டு நினைவுகூரப்படுகிறார். இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.