news-details
வத்திக்கான் செய்திகள்
“குடும்பங்களையும் திருமண உறவையும் உடனடியாகப் பாதுகாக்கவேண்டும்”- திருத்தந்தை லியோ

புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற பொது மறைக்கல்வி மன்றாட்டில் பங்கேற்ற திருத்தந்தை லியோ,  இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘இன்றைய உலகில் திரு அவை’ என்னும் ஆவணத்தை மையமாகக் கொண்டு உரையாற்றினார். ‘குடும்பமே சமூகத்தின் முதன்மையான அடித்தளம்’ என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ‘ஆழமான மனிதநேயத்தைக் கற்பிக்கும் பள்ளி’ என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், தம்பதியரின் பரஸ்பர அர்ப்பணிப்பும், குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதும் இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும் புனிதமான கடமையாகும் என்றார். அவ்வாறே, அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் குடும்பங்களின் நலனைக் காக்க முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை, “கருவுற்ற நொடி முதல் மனித உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும்; திருமண உறவின் மேன்மை மதிக்கப்பட வேண்டும்” என்று கூறி, நாசரேத்தின் திருக்குடும்பம் போல உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் திகழ வாழ்த்தினார்.