news-details
கவிதை
கல்லறை தேடும் அடக்கங்கள்!

உடலுக்கு ஒரு கல்லறை...

தீய எண்ணங்களுக்கு ஓர் அடக்கம்!

இன்று கல்லறை வாசலில்

மலர்களை மட்டும் வைக்காமல்,

மனத்தில் இருக்கும் வெறுப்பையும்

மண்ணோடு புதைத்திடுவோம்!

பேசத் தயங்கிய உண்மைகளைப் புதைத்து,

உண்மையின் குரலாய் எழுந்திடுவோம்!

உதவ மறுத்த கரங்களை மாற்றி.

உதவும் கரங்களாய் மலர்ந்திடுவோம்!

தன்னல எண்ணங்களைப் புதைத்து,

பிறர் நலனில் மகிழ்ந்திடுவோம்!

அன்பில்லா அதிகாரத்தைப் புதைத்து

அன்பால் வழிநடத்தக் கற்றிடுவோம்!

அடங்காத ஆசைகளைப் புதைத்து

அமைதியான வாழ்வு வாழ்ந்திடுவோம்!

மன்னிக்காத மனத்தைப் புதைத்து,

மனிதநேயத்தோடு நடந்திடுவோம்!

கல்லறை சொல்லும் பாடம் ஒன்றே,

காலம் நமக்குச் சொந்தமில்லை!

வாழும் நாள்கள் கொஞ்சமே,

வாழும் விதம்தான் முக்கியயமே!

கல்லறையில் மலர் வைப்பதோடு நின்றுவிடாமல்,

உயிரோடு இருப்பவர்களின்

இதயத்தில் அன்பை விதைப்போம்.

இறந்தவர்களுக்காக

மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம்

உயிரோடு இருப்பவர்களின்

வாழ்க்கையில்

நம்பிக்கை விளக்கை ஏற்றுவோம்!