news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.11.2026)

“உண்மையான செல்வம் நாம் எதைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை; மாறாக, அன்புடன் எதைப் பகிர்ந்துகொள்கிறோம் என்பதில்தான் உள்ளது.”            

நவம்பர் மாத இறைவேண்டல் கருத்து

“புனிதத்துவம் என்பது ஒருசிலருக்கு மட்டுமே உரிய சலுகை அல்ல; அது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுவான அழைப்பாகும்.”

நவம்பர் 1, அனைத்துப் புனிதர்களின் விழா மறையுரை

“நீதிமான்களின் ஆன்மாக்கள் இறைவனின் அன்பும் உறுதியும் நிறைந்த கரங்களில் என்றென்றும் பாதுகாக்கப்படுகின்றன. இறந்தவர்கள் இறைவன் வாக்களித்துள்ள நிலைவாழ்வின் ஒன்றிப்பில் பங்குபெறவேண்டும் என்பதே நமது இறைவேண்டலாக இருக்க வேண்டும்.”

நவம்பர் 02, இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் நினைவு நாள் மறையுரை

“கிறிஸ்துவின் அன்பு, கிறித்தவர்கள் தங்களின் எல்லைகளைக் கடந்து, குறிப்பாகத் தனிமையில் வாடுவோர், ஏழைகள் மற்றும் துன்பப்படுவோரைச் சென்றடைந்து அவர்களுக்குப் பணியாற்ற அழைப்பு விடுக்கிறது.”

அடுத்த ஆண்டு 101-வது உலக மறைபரப்பு ஞாயிறு கருப்பொருள்

“தொழில்நுட்பம் மனிதர்களைத் தனிமைப்படுத்தும் இக்காலத்தில், விளையாட்டுகள் மக்களை ஒன்றிணைத்து, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் அமைதியை ஊக்குவிக்கின்றன.”

நவம்பர் 1, விளையாட்டு வீரர்களுக்கான மறையுரை