1597-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா கடலோரப் பகுதியில் பழங்குடியின மக்களுக்குப் பணியாற்றியபோது கொல்லப்பட்ட ஐந்து ஸ்பானிய பிரான்சிஸ்கன் துறவிகளுக்கு ‘அருளாளர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சவான்னா
நகரில் அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்விற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக டொராண்டோ பேராயர் கர்தினால் ஃபிராங்க் லியோ தலைமை தாங்கினார்.
‘ஜார்ஜியா மறைச்சாட்சிகள்’ என்று
அழைக்கப்படும் பெட்ரோ டி கோர்பா, பிளாஸ்
ரோட்ரிக்ஸ், மிகுவேல் டி அனான், அந்தோணியோ
டி படாஜோஸ் மற்றும் பிரான்சிஸ்கோ டி வேராஸ்கோலா ஆகிய
ஐந்து துறவியரும் ‘நற்செய்தியின் சாட்சிகள்’
என்று கர்தினால் புகழாரம் சூட்டினார். கத்தோலிக்கத் திருமணப் போதனையை ஆதரித்தும், மனித மாண்பைப் பாதுகாத்தும் துணிவுடன் செயல்பட்டதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க
சுதந்திரத்தின் 250-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் புனித பிரான்சிஸின் 800-ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு இந்த நிகழ்வு சிறப்புப் பெறுகிறது. இவர்களின் தியாகம், இன்றைய சமூகத்தில் நிலவும் பிரிவினைகளைக் கடந்து, அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண கத்தோலிக்கர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கர்தினால் கூறியுள்ளார்.