news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (31-08-2025)

மனிதர்கள் மீது கடவுள் வெளிப்படுத்தும் விவரிக்க முடியாத அன்பை, புனித கன்னி மரியா நமக்குக் கற்பிக்கின்றார்.”

- ஆகஸ்டு 11, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா தயாரிப்புச் செய்தி

துரோகத்தின் நிழல் மிகவும் அன்புக்குரிய நம் உறவுகளில் ஊடுருவும்போது, அது நமக்கு நன்கு தெரிந்த ஒரு துன்பமாகிறது.”

- ஆகஸ்டு 13, புதன் மறைக்கல்வி உரை

உயிர்ப்பின் தூய ஆவியார் நம்மிடையேயும் நமக்குள்ளும் அமைதியாக இருந்து, ஒவ்வொரு நாளும் நம் இதயம் இறப்பிற்கு அப்பாற்பட்ட வாழ்வைப் பெற உதவுகின்றார்.”

- ஆகஸ்டு 17, அன்னை மரியா ரொத்தோன்ந்தா திருத்தலத்தில் திருப்பலி

நற்கருணையில் திரு அவை பிறப்பெடுக்கின்றது, நற்செய்திப் பணியில் அது உயிருடன் வாழ்கின்றது.”

- ஆகஸ்டு 17, திருத்தந்தை லியோ அவர்கள் பணியேற்றதன் நூறாவது நாள்

உண்மையாகச் செயல்படுவது ஒரு விலையைக் கொண்டுள்ளது என்றாலும், உலகில் பொய்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.”

- ஆகஸ்டு 17, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (24.08.2025)

இழப்பு மற்றும் துன்பத்தின் முகம் வழியாக, கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமாக இருக்கிறார்.”

- ஆகஸ்டு 4, பெய்ரூட் துறைமுக வெடி விபத்தின் 5-ஆம் ஆண்டு நினைவுச் செய்தி

திரு அவை என்னும் கிறிஸ்துவின் உடலில் சந்தித்தல், அறிந்துகொள்ளுதல், பகிர்தல் போன்றவற்றின் வழியாக அவரது உடலின் உறுப்புகளாக நாம் மாறுகின்றோம்.”

- ஆகஸ்டு 5, மெஜீகோரியில் 36-வது இளைஞர் விழா வாழ்த்துச் செய்தி

நற்கருணையானது பலிபீடத்தில் மட்டுமல்லாது, நமது வாழ்க்கையின் எல்லாவற்றையும் ஒரு காணிக்கையாகவும் நன்றி செலுத்துதலாகவும் கருதி வாழும் அன்றாடக் கொண்டாட்டமாகும்.”

- ஆகஸ்டு 6, புதன் மறைக்கல்வி உரை

நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றில் வேரூன்றிய ஓர் உலகளாவிய நெறிமுறையை நாம் உருவாக்க வேண்டும்.”

- ஆகஸ்டு 6, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களின் 80-வது ஆண்டு நினைவுச் செய்தி

ஒருவர் தாராள உள்ளத்தோடு கொடுப்பதால் அவர் வேறுபட்ட ஒன்றைப் பெறுகின்றார்; அது தங்கமோ வெள்ளியோ அல்ல, மாறாக நிலைவாழ்வு.”

- ஆகஸ்டு 10, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (17.08.2025)

கிறித்தவர்களின் ஆயுதங்களான நம்பிக்கை, உண்மை, நீதி மற்றும் அமைதி ஆகியவை அமைதியானதொரு உலகத்தை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது.”

- ஜூலை 28, சாரணர் இயக்க பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தக் கூடாது.”

- ஜூலை 29, இணைய வழியில் மறைப்பணியாற்றுவோருக்கான உரை

இயேசுவிடம் மக்களை அழைத்து வரும் பணியில் திரு அவை ஒருபோதும் தோல்வியடையக் கூடாது.”

- ஜூலை 30, புதன் மறைக்கல்வி உரை

நாம் ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தும் நம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சியானது நம் இதயத்தில் உள்ளவற்றையே வெளிப்படுத்துகின்றன.”

- ஆகஸ்டு 2, இளைஞர்களுக்கான இரவு விழிப்புச் செப வழிபாடு

நமது இதயங்களை அகலமாகத் திறந்து, கடவுளை நமது இதயத்திற்குள் நுழைய அனுமதித்து, முடிவில்லா விண்ணகத்தைப் பார்ப்பது மிகவும் அழகானது.”

- ஆகஸ்டு 3, ஞாயிறு திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.08.2025)

அனைத்துலக மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். மேலும், மக்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்வதைத் தடை செய்தல் வேண்டும்.”

- ஜூலை 21, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் தொலைப்பேசி உரையாடல்

விபத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் நலமும் இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிச் சமூகத்திற்கு அமைதியும் கிடைக்கப்பெறுவதாக.”

- ஜூலை 23, வங்கதேச விமான விபத்து இரங்கல் செய்தி

மனிதநேயத்திலும் ஆன்மிகத்திலும் நற்செய்தியைப் பிரதிபலிக்கும்படி நாம் மாறிட வேண்டும். இதனால் நாம் இயேசு கிறிஸ்துவின் அதே மனப்பான்மை உடையவர்களாக இருக்க முடியும்.”

- ஜூலை 25, குருத்துவ உருவாக்கப் பணியாளர்களுக்கான செய்தி

உரையாடலின் மூலம் பகையை மங்கச்செய்வதையும், நீதி நடைமுறைப்படுத்தப்படுவதையும், மன்னிப்பு மதிக்கப்படுவதையும் கற்றுக்கொள்ளலாம்.”

- ஜூலை 26, Pax Christi USA தேசிய மாநாடு.

கடவுளின் நன்மை, பொறுமை மற்றும் இரக்கத்தினால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; இதனால், கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல், அவர் முகம் நம் முகத்தில் பிரதிபலிக்கக்கூடியதாக அமையும்.”

- ஜூலை 27, மூவேளைச் செபம்

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.08.2025)

சமூக அநீதிகளை எதிர்கொண்டு, தீமை மற்றும் சோதனைக்கு அடிபணியாமல், போர் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலத்தில் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும்.”

- ஜூலை 14, காஸ்தல் கந்தோல்போ காவலர் சிற்றாலயத்தில் திருப்பலி

போட்டி என்பது எதிர்த்து நிற்கும் செயலாக இருந்தாலும், எதிராளிகளைக்கூட ஒன்றிணைக்கும் ஒரு மோதல்களமே விளையாட்டு.”

- ஜூலை 15, ‘Partita del Cuoreகால்பந்தாட்டப் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அனைத்து மக்களும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களுடன் பொதுத்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

- ஜூலை 18, இஸ்ரயேல் பிரதமருடன் தொலைப்பேசி உரையாடல்

விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இரக்கம் பெறவும், தூய இறைவனின் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியுடன் இறையாசிரை நாம் பெறவும் இறைவேண்டல் செய்வோம்.”

- ஜூலை 19, ஈராக்கின் குட் பகுதி தீ விபத்து இரங்கல் செய்தி

சேவை செய்வதும் செவிமடுப்பதுமே நம்மை இறைவனின் இதயத்தில் இணைக்கின்ற திறன்களாகும்.”

- ஜூலை 20, அல்பானோ பேராலய ஞாயிறுத் திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.07.2025)

உலகைத் தெருக்களிலிருந்து பார்க்கவும், குரலற்றவர்களின் குரலைக் கேட்கவும், மரபுகளை உடைப்பதுமே பத்திரிகை.”

- ஜூலை 6, (L’Osservatore di strada) இத்தாலி இதழின் மூன்றாம் ஆண்டு

இயேசுவே திரு அவையின் படைப்பாளர், தலைவர் மற்றும் படைப்பைப் பராமரித்து அமைதியை மேம்படுத்தும் இறைவன்.”

- ஜூலை 9, படைப்பைப் பராமரிக்கத் திருப்பலி.

செயற்கை நுண்ணறிவு (AI), மனிதப் பகுத்தறிவைக் கொண்டு திறமையாகப் பணிசெய்தாலும், தார்மிகத் தேர்ந்துதெளிதல் மற்றும் உண்மையான உறவுகளை உருவாக்க முடியாது.”

- ஜூலை 10, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வழியாக ITU-க்கு வாழ்த்து

முதியவர்களின் ஞானம், விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் அவர்களின் அனுபவ வாழ்க்கை தலைமுறைகளுக்கிடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது.”

- ஜூலை 11, முதியோர் நாளையொட்டி தயாரிப்பு

செபம், இணக்கமுள்ள செவிசாய்த்தல் உள்ளடக்கிய பணிகள் அனைத்தும் தூய ஆவியாரின் கனிகள், விலைமதிப்பற்ற பரிசுகள்.”

- ஜூலை 12, துறவற சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு

நிலை வாழ்வினை உரிமையாக்கிக்கொள்ள இறப்பை ஏமாற்றுவதற்குப் பதிலாக, வாழ்வை நாம் போற்றவேண்டும்.”

- ஜூலை 13, லிபெர்த்தா வளாகத்தில் மூவேளைச் செபவுரை