news
வத்திக்கான் செய்திகள்
“கடவுள் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பார்”

துறவற அருள்சகோதரிகளைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், “உங்கள் எதிர்காலத்தை உங்கள் அருள்சகோதரிகளின் மற்றும் திரு அவையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காலத்தில் இருக்கிறீர்கள். எனவே, தூய பவுல் வெளிப்படுத்திய ஆழமான, அழகான நம்பிக்கையை அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்த ஆவல் கொள்கிறேன்எனக் கூறி அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
எதிர்நோக்கு என்னும் சுடரை அணையாமல் காக்கும் குருத்துவப் பயிற்சி - திருத்தந்தை 14-ஆம் லியோ

அருள்பணித்துவ வாழ்வுக்கெனத் தயாரித்து வரும் ஏறக்குறைய 4000 குருத்துவ மாணவர்களை யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைப்பணித் திரு அவையின் சேவகர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் பயிற்சி பெறும் குருத்துவ மாணவர்கள் திருப்பயணிகளாக மட்டுமல்ல, நம்பிக்கையின் சான்றுகளாகச் செயல்படுகிறார்கள் என்று அவர்களை வாழ்த்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் கயானா தலைமைக்குத் திருப்பீடம் நன்றி தெரிவித்துள்ளது. அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர் என்று 1967-ஆம் ஆண்டிலேயே திருத்தந்தை புனித 6-ஆம் பவுல் இறைவாக்காக உரைத்துள்ளார் என்றும், அமைதி என்பது போர் இல்லாத நிலை மட்டுமல்ல; மாறாக உடன்பிறந்த உணர்வு, ஒத்துழைப்பு மற்றும் எல்லா நலன்களையும் ஊக்குவிப்பதாகும் என்றும் கூறியுள்ளது. நீடித்த அமைதி என்பது தனிமனித மாண்பை மதிப்பதுடன், நீதியும் ஒற்றுமையும் மலரத் தேவையான சூழலை ஊக்குவிப்பது என்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர் கார்லோ அகஸ்திஸ்குப் புனிதர் பட்டம்!

இளைஞராக இருந்தாலும்இறைவனுக்குப் பணிசெய்ய வேண்டும்என்ற துணிவு புனித நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு நவம்பர் 20 புதன் மறைக்கல்வியின்போது 2025 ஏப்ரல் 27 அன்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ், பியர் ஜியோர்ஜியோ மற்றும் கார்லோ அகஸ்திஸ் ஆகியோருக்கு 2025 ஏப்ரல் 27 புனிதர் பட்டம் வழங்குவதை அறிவித்த நிலையில் அவரது மறைவினால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ செப்டம்பர் 7 ஞாயிறு அன்று அளிக்க இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் மறைப்பணியை விவரிக்கும் ஆவணப்படம்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் பெரு நாட்டில் (Robert Francis Prevost) மறைப்பணியாளராக, பங்குப்பணியாளராக, பேராசிரியராக, உருவாக்குநராக, ஆயராக, நண்பராக ஆற்றிய மறைப்பணிகளை எடுத்துரைக்கும் விதமாக, ‘லியோன் தி பெருஎன்ற புதிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்பானிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படமானது, பெரு நாட்டில் உள்ள பல்வேறு சிறிய, பெரிய நகரங்கள், கிராமங்கள், மாவட்டங்கள், புறநகர்ப் பகுதிகள், பள்ளிகள், துறவற சபைகள் போன்ற இடங்களில் திருத்தந்தை அவர்கள் மறைப்பணியாற்றித் திருப்பலி நிறைவேற்றியது, இளையோரைச் சந்தித்தது ஆகியவை குறித்த காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.

267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பெரு மக்கள், எவ்வாறு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதும் இக்காணொளியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்சகோதரிகள்!

குருதி சிந்தி மறைச்சாட்சிகளாக மரித்த 15 தூய கத்தரீன் சபை அருள்சகோதரிகளை மே 31 அன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இவர்கள் போலந்து மீதான இரஷ்யப் படையெடுப்பில் 1945 ஜனவரி 22 முதல் நவம்பர் 25 வரை வன்முறையாளர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மறைச்சாட்சிகளாகத் தங்கள் உயிரை இழந்தவர்கள்.