news
வத்திக்கான் செய்திகள்
இஸ்ரேல் பிரதமருடன் திருத்தந்தை தொலைப்பேசி உரையாடல்

ஜூலை 18, வெள்ளிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இஸ்ரேல் இராணுவத்தால் காசாவின் திருக்குடும்பக் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளானதை முன்னிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அங்கு நிலவி வரும் சூழல் குறித்து அறிந்துகொண்டார். காசாவில் உள்ள மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த திருத்தந்தை குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயர் மாமன்றச் செயலாக்கத்திற்கான புதிய ஆவணம்

ஆயர் மாமன்றச் செயலாக்கத்திற்கான பாதைகள்என்னும் புதிய ஆவணம் வடிவமைக்கப்பட்டு, அகில உலகத் திரு அவை முழுவதும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணிக்கும் பொதுவான, பகிரப்பட்ட கட்டமைப்பை வழங்க வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ஆயர் மாமன்றச் செயலாக்கப் பாதையின் விளக்கங்கள், நோக்கங்கள், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் குழுக்கள், அவர்களின் பங்களிப்பு, இறுதி ஆவணத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முறைகள் இடம்பெற்றன எனவும், ஒருங்கியக்கத் திரு அவை என்பது மறைபரப்புப் பணியில் உள்ளது என்றும், இந்தப் பணியே ஆயர் மாமன்றத்தைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றும் ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் கர்த்தினால் மரியோ கிரேச் தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
அருள்பணியாளர் லிக்கரியோன் அருளாளராக உயர்த்தப்பட்டார்!

பார்சிலோனாவின் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் ஆலயத்தில், புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ, மாரிஸ்ட் சபை அருள்பணியாளர் லிக்கரியோன் அவர்களை அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமை ஏற்று மறையுரையாற்றினார். அருளாளர் லிக்கரியோன் பற்றிக் கூறும்போது, கல்வி என்பது வெறும் அறிவை மாற்றுவது மட்டுமல்ல; மாறாக, மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தன்னையே கொடுப்பதை உள்ளடக்கிய உண்மையான அன்புப் பணியைச் செய்தார் என்று உரைத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
புறக்கணிக்கப்படும் சூடான் குழந்தைகளின் உரிமைகள்!

சூடானின்சேவ் சில்ட்ரன் (குழந்தைகளைப் பாதுகாப்போம்) அமைப்பின் தேசியத் துணை இயக்குநர் பிரான்சிஸ்கோ லனினோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாக சூடான் நாட்டுக் குழந்தைகள் அடிப்படைக் கல்வியை இழந்துள்ளனர் என்றும், இது அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குப் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், இதற்குச் சூடானில் போர் நிறுத்தத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும் இந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
குழந்தைகளைச் சந்தித்தார் திருத்தந்தை!

திருத்தந்தை 14-ஆம் லியோ வத்திக்கானில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் இளையோர்களையும் சந்தித்து ஒருவரை ஒருவர் மதிக்கவும், தன்னைப்போலப் பிறரையும் நேசிக்கவும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் நண்பர்களாகவும் சகோதர-சகோதரிகளாகவும் இருக்க வேண்டுமெனவும் வாழ்த்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கிறிஸ்துவின் மறுவுடல் அருள்பணியாளர்கள்”

இயேசுவின் திரு இதயப் பெருவிழாவை முன்னிட்டு 32 பேரைக் குருத்துவ அருள்பொழிவு செய்த திருத்தந்தை 14-ஆம் லியோ, “அருள்பணியாளர்கள் தங்களது வாழ்வில் நற்கருணைக்கு முதலிடம் கொடுத்து, இறைமக்களைக் கவனித்து, திரு அவையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்என்றும், “அருள்பணித்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவின் உடலோடு நம்மை ஒன்றிக்கின்ற தூய்மைப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் பணிஎன்றும் கூறினார்.