கல்வி கற்பிக்கும் ஏ.ஐ. நண்பன்
கற்பனை
செய்து பாருங்கள்... உங்கள் வகுப்பறையில் இருக்கும் கரும்பலகை, நீங்கள் பாடம் கவனிக்கும் போதே உங்கள் முகபாவனையை வைத்து, ‘உங்களுக்கு இந்தக் கணக்கு புரியவில்லை’ என்பதைப்
புரிந்துகொண்டு, இன்னும் எளிமையாக விளக்கத் தொடங்கினால் எப்படியிருக்கும்?
ஆம்!
இன்று நாம் ஏ.ஐ. யுகத்தின்
வாசலில் இல்லை; அதன் உள்ளறைக்கே வந்துவிட்டோம். உலக வரலாற்றின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் இந்த ‘மின்னணு மூளை’ இன்று கரும்பலகையையும் நோட்டுப்புத்தகத்தையும் டிஜிட்டல் மந்திரக்கோலாக மாற்றிவருகிறது.
ஓர்
ஆசிரியர் பாடம் நடத்துவதைக் காட்டிலும், மாணவர்களின் தேர்வுத்தாள்களைத் திருத்தவும், யார் யாருக்கு எந்தப் பாடம் புரியவில்லை என்று அட்டவணை (Pattern) போடவுமே
அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏ.ஐ. வந்தபிறகு
இந்த ‘ஹோம்வொர்க்’ அனைத்தையும்
அது சில நொடிகளில் முடித்துவிடுகிறது. இதனால் ஆசிரியர்கள் இயந்திரமயமான வேலைகளில் இருந்து விடுபட்டு, கற்பிப்பதில் மாணவர்களோடு அதிக நேரம் செலவழிக்க முடிகிறது
உலக
நாடுகள் ஏ.ஐ. கல்வியை
வெறும் பாடமாகப் பார்க்காமல், தங்களின் எதிர்காலப் பேராயுதமாகப் பார்க்கின்றன. ஏ.ஐ. என்பது
மனிதர்கள் போலவே சிந்தித்து, கற்று முடிவெடுக்கும் திறன் பெற்ற மென்பொருள் என்பதை அறிவோம். இந்த மென்பொருள்-இயந்திரத்துடன் பேசுதல், உரைகள் மற்றும் பிம்பங்கள் உருவாக்குதல், மொழிபெயர்த்தல் என்று பல வழிகளில் மனிதனைப்
போன்று சூழலுக்கேற்ப இயங்கும் ஏ.ஐ. நாள்களில்
வாழத் தொடங்கி விட்டோம். பல நாடுகள் இதில்
தங்களுக்கென்று இடத்தைப் பிடிக்க ஏ.ஐ. கல்வியில்
ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி, முதலீடு செய்தும் வருகின்றன. ஏ.ஐ. கல்வி
என்பது கற்றல், திட்டமிடுதல், மதிப்பிடுதல் மற்றும் அறிவுறுத்தல் என்பவைகளை டிஜிட்டல் கருவிகள் துணையுடன் செயல்படுத்துவது.
உலக
அளவில் அமெரிக்கா, பின்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, தென் கொரியா, ஜப்பான், எஸ்தோனியா போன்ற நாடுகள் ஏ.ஐ. கல்விமுறையை
நடைமுறைப்படுத்தியுள்ளதாகக்
கூறப்படுகிறது. சில நாடுகள் இத்தொழில்நுட்பத்தைக் குறித்து அறிதல், செயலாற்றல் என்பவைகளை எவ்வகையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்ற பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பாடத்திட்டத்தை (curriculum) வகுக்கவும் தொடங்கியுள்ளன.
ஏ.ஐ.
கல்வி
தொழில்நுட்பம்
மனித
ஆற்றல் (intelligence) சார்ந்த வேலைகளை நவீன கணினி - இயந்திரத் திறன் அடிப்படையில் செயல்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
உலகளவில் கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஐ. கல்விப்
பிரிவில் கற்கும் இயந்திரம், பேசும் இயந்திர மாடல்கள், ரோபோ, நரம்புவலை (ML, LLM, Robotics and neural
networks) போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தொழில்நுட்பம்
என்பது ஒரு தையல் இயந்திரம் போன்று வகுப்பறை அறிவுத்திறனை வாழ்க்கைத் தேவைகளுக்குத் தைக்கும் கருவியாக, கல்வியை அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்துச்சென்று ஒருவரின் வாழ்க்கையோடு பயணிக்கத் துணைபுரிகிறது. இத்திசையில், மாணவர் கற்கும் முறையில் புதிய வடிவம், ஆசிரியர் கற்பிக்கும் முறையில் மாற்றம் என்று ஒரு புதிய கற்கும் இயக்கமாக ஏ.ஐ. கல்வி
உருவெடுத்து வருகிறது.
பேசும்
இயந்திரமாடல்கள் (LLMS), ஆசிரியர்
துணையின்றி மாணவர்களுக்கு உடனுக்குடன் சந்தேகங்களைத் தீர்க்கும் கருவியாகச் செயல்படுவது கல்வி உலகில் புதுமையாகப் பார்க்கப்படுகிறது. போதனைத் திட்டமுறை, மாணவர்களுக்கான உதவி மற்றும் தரவுப் பாதுகாப்பு என்பவைகளை நடைமுறைப்படுத்த கல்விக்கூடங்களும் தயாராகி வருகின்றன. உலகளவில் இத்தொழில்நுடபத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்கள், ஆராய்ச்சி, கடினமான பாடத் தலைப்பு போன்ற தேவைகளுக்கு ஏ.ஐ.யைப்
பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஏ.ஐ.
கல்வியின்
பயன்கள்,
இடறல்கள்
கரும்பலகையும்
சுண்ணக்கட்டியும் இருந்த வகுப்பறைகள் இன்று கணினித் திரைகளுக்கு அப்பால் செயற்கை செயலாற்றலின் (AI) புரட்சி
நாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்துவது, துல்லியமான பாடத் திட்டங்களை வகுப்பது, மாணவர்களின் கற்றல் திறனைச் சீராகக் கண்காணிப்பது எனக் கல்வித் துறையின் எஞ்சினாக AI உருவெடுத்து
வருகிறது.
ஒருபுறம்
அசுர வேகம்; மறுபுறம் சில சவால்கள்... ஏ.ஐ. கல்வி
நம் வாழ்வில் நிகழ்த்தும் வித்தைகளையும், நாம் கவனிக்க வேண்டிய பக்க விளைவுகளையும் சற்று ஆராய்வோம்.
வகுப்பறைக்கு
வெளியே மாணவர்களுக்கு 24 மணி நேரமும் கூடவே இருக்கும் ஒரு தனிப்பட்ட ஆசிரியர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஏ.ஐ.! மாணவர்கள்
இதன் மூலம் பெறும் நேரடிப் பயன், எழுதும்போதே இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது, சூழலுக்கேற்ப கடிதமாகவோ, கட்டுரையாகவோ அல்லது உரையாடலாகவோ எழுத்தின் தொனியை மாற்றியமைத்தல், சுவாரசியமான கதைகள் மற்றும் உரையாடல்களை உருவாக்கி மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுதல், படிக்கும்போது சந்தேகம் வந்தாலும், உடனுக்குடன் பதிலளித்து நேரத்தை மிச்சப்படுத்துவது போன்றவை இதன்மூலம் பெறும் வேறு நன்மைகள் எனலாம். சில நேரங்களில் ஏ.ஐ. கருவிகள்
பார்ப்பதற்கு மிகவும் சரியானது போலத் தோன்றும். ஆனால், முற்றிலும் தவறான பதில்களை அள்ளி வீசும்.
இவற்றைக் கண்டறிய திறன்பெற்ற ஆசிரியர்களும், விழிப்புடன் இருக்கும் மாணவர்களும் மிக மிக அவசியம்.
ஏ.ஐ. கல்வி வளையத்தில்
மாணவர்கள் தொடர்பான ஏராளமான தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் கடமையும் உள்ளது. ஏ.ஐ. பயன்படுத்துவது
இணையதளத்தைச் சார்ந்துள்ளது. ஆசிரியர்-மாணவர், நகர - கிராமப் புறங்களில் பரவலாக இதனைப் பெற்றிருப்பதே ஏற்றத்தாழ்வைத் தவிர்த்து, ஒன்றிணைந்த சமநிலைச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் கருவியாக அமையும்.
ஏ.ஐ.
ஆசிரியருக்குப்
பதிலாக
அமையுமா?
பாரம்பரியக்
குருகுல முறை, வகுப்பறைக் கல்வி, அஞ்சல்வழிக் கல்வி, ஆன்லைன் கல்வி என உருமாறி,இன்று
ஏ.ஐ.கல்வியை நோக்கி
நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். காகிதத்திற்குப் பதில் இ-புத்தகங்களும், பேனாவிற்குப்
பதில் மென்பொருள்களும் வந்தது போல, ஆசிரியர்களுக்குப் பதிலாக ஏ.ஐ. வந்துவிடுமா?
காலப்போக்கில் இவைகளைக் கணினி முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இன்றைய டிஜிட்டல் உலகில் காகிதப் புத்தகங்கள் இடத்தில், இ-புத்தகங்கள் மற்றும்
பிடிஎஃப் (PDF), பேனாவிற்குப்
பதிலாக மென்பொருள்கள் என்ற மாற்றங்கள் போன்று ஒருநாள் ஆசிரியர்களையும் இத்தொழில்நுட்பம் மாற்றிவிடுமோ என்ற சந்தேகமும் எழலாம்.
இன்று
நாம் ஏராளமான அறிவு சார்ந்த செய்திகளையும், நுண்ணிய விளக்கங்களையும் தொலைக்காட்சி மற்றும் பல வலையமைப்பு
ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். ஆனால், கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ இதனால்
பாதிப்படைவதில்லை என்பதைப் போன்று, ஏ.ஐ. கல்வி
வழி ஆசிரியரின் இடத்திற்கு மாற்றாக அமையாது. ஏ.ஐ. என்பது
கல்வி பயில உதவும் துரிதமான கருவியாக இருந்தாலும், மாணவர்களை உருவாக்குதல், சிந்திக்கும் திறனை மேம்படுத்தல், புதுமையைப் படைத்தல் என்ற உயரிய நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்குமா என்று சிந்திக்க வைத்துள்ளது.
ஆசிரியர்கள்
அறிவை மட்டும் புகட்டுவதில்லை; மாணவர்களுக்குச் சிறந்த ஆலோசகராக, வழிகாட்டியாக, ஊக்கமளிப்பவராகத் திகழ்கின்றனர். மனித ஈடுபாடு, அறிவுறுத்தல், கவனமான மேற்பார்வை போன்ற பிரிவுகளில் உதவிடும் ஒரு புதிய துணையாகவே கல்வியில் ஏ.ஐ. பார்க்கப்படுகிறது.
எவ்வளவுதான் தொழில்நுட்ப முன்னேற்றமிருந்தாலும் வளமான ஆசிரியர்-மாணவர் உறவு, மாணவர்-பெற்றோருடன் தெளிவான தொடர்பு, மாணவரின் நலன் காத்தல் என்பவையே கருவிகளைவிட ஏ.ஐ.-யைச்
சேர்த்துக் கல்விக்கூடங்களின் வெற்றிக்குக் காரணமாக அமையுமென்று அறியப்படுகிறது.
முற்போக்கு இந்தியப் பெண் முகங்களில் ஒருவரும், ‘புக்கர்’ பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளருமான சூசன்னா அருந்ததி ராய், “யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகளால் என்ன பயன்?” என்று வினா எழுப்புகிறார்.
“உங்கள் எழுத்துகள் படிக்கிறவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக்கூட இருக்கலாம். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துகள், எழுத்துகளே அல்ல” என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
“எப்போது அன்றாடப் பேச்சில்கூட இயல்பாக ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ... அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்” என்கிறார் அமெரிக்கக் கவிஞர் தாமஸ் எலியட். அக்காலத்தில் குடும்பப் பாச உறவுக் கடிதங்களுக்குக் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் கவலையிலும் உணர்வுப்பூர்வமான பெரும் பங்கிருந்தது. இதயப் பரிமாற்றங்களுக்குக் காதல் கடிதங்கள் துணைசெய்தன. பணம் பெற்றுக்கொண்ட பின்பு கிழிக்கப்படும் மணியார்டர் அட்டையில் எழுதப்பட்ட வரிகளும் மகிழ்ச்சியளித்தன. காலப் போக்கில் கடிதம் எழுதுவது காலாவதியான பின்பு கடிதங்கள் பழைய நினைவுகளாகிவிட்டன.
எழுத்து
என்பது என்ன?
எழுத்து
என்பது உயிரைப் பிரசவிப்பது போன்றது. தனக்கு ஒரு கருத்து தோன்றியது என்றால், உண்மையான எழுத்தாளன் மக்களுக்குப் புரியும்படி எளிய நடையில் கொண்டுசேர்த்த பின்னரே அவனுக்கு மனத்தில் உற்சாகம், நிம்மதி பிறக்கும். வாசகர்கள் அக்கருத்தை ஏற்காவிட்டாலும், கூறவேண்டியதைத் தானே சரியாகப் புரிந்துகொண்டு கூறினாலே நிறைவு கிடைக்கும். கூற வந்ததைப் பேச்சுவழக்கில் அல்லாமல், அதிநவீன வார்த்தைகளால் மனத்தில் தோன்றும் உணர்வுகளை விளக்கமாக, தெளிவாக, வலுவான முறையில் எழுத்துகளில் கூறமுடியும். நல்ல எழுத்து, தொடர்பு நிலைக்கான எரிசக்தியாகச் செயலாற்றுகிறது, தொடர்புகள் சமூகக் கட்டமைப்பு உருவாவதில் பெரும் பங்காற்றுகிறது.
எழுத்துகளின்
பயன்பாடுகளாக வெளிப்படுத்த, விளக்கிட, ஆய்வு செய்திட, கற்றுக்கொள்ள, மகிழ்விக்க, தெரிவிக்க, விவரிக்க, விவாதிக்க, வலியுறுத்த, மதிப்பீடு செய்ய, பிரச்சினைக்குத் தீர்வு காண, சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்த என பல்வேறு வகைகளில்
உதவுகின்றன. எழுத்துகள்
சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன; சிந்தனைகள் நாகரிகத்திற்கு வடிவம் கொடுப்பதுடன், அதன் கூறுகளில் ஒன்றான கலாச்சாரம் எழுத்து ஊடகத்தால் உறுதித்தன்மை அடைகிறது. சமூகங்கள் மற்றும் அவற்றின் பண்பாட்டுக்கான அடையாளத்திற்கு எழுத்தாற்றல் பெரும் உதவி புரிகிறது. எழுத்துகள் வாசிப்பவரை அதன் நடையில், விவரிக்கும் போக்கில், கருத்தாழத்தில் தொந்தரவு செய்யவேண்டும். அதிகப் பிழைகள் கொண்ட எழுத்துகள் வாசகர்களைத் தொடர்ந்து படிக்கவிடாமல் ஆர்வம் குறைத்து தொந்தரவு செய்கின்றன. எழுத்தாளர்கள் முதலில் பிழையின்றி எழுதத் தெரிந்திருக்கவேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது இலக்கியத் தமிழ் அல்ல; பிழையில்லாத் தமிழே. ‘எழுத்துகள் புனிதமானவை, மதிக்கத் தகுதியுள்ளவை. சரியான எழுத்துகள் சரியான முறையில் எழுதப்பட்டால், அவை உலகை சற்றேனும் உந்தித்தள்ளும் சக்தி வாய்ந்தவை’
என்கிறார் ஆங்கில நாடக ஆசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான டாம் ஸ்டாப்பர்ட்.
தொந்தரவு செய்வதற்கான
தகுதிகள்
ஒரு
நல்ல எழுத்தாளனின் எழுத்துகள் நிச்சயம் வாசிப்பவர் மனத்தை சிறிதேனும் அசைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். உங்களை ஓர் எழுத்தாளர் என்று நீங்கள் கருதினால், எழுதுவது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கக்கூடாது, அது உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். தினமும் உணவு போல, தினமும் எழுதவேண்டும். தினமும் எழுதுவதன் மூலமே எழுத்தாளனுக்குரிய தன்னம்பிக்கை உருவாகும். தினமும் எழுத எழுதத்தான் எழுத்துகள் மெருகேறும்.
எழுத்து
என்பதை உடல் பயிற்சியோடு ஒப்பிட்டால் புத்தகங்கள் படிப்பதுதான் அதற்கான ஊட் டத்தையும் ஆற்றலையும் தரும் உணவு. உணவு உண்ணாமல் ஓடினால் என்னவாகும்? எழுத்தாற்றலுக்கு அடிப்படையான புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். மேலோட்டமாக அல்லாமல், கருத்துகளை உள்வாங்கிப் படிப்பதன் மூலம் நம் மனத்தில் இருக்கும் கருத்துகளை எழுத்துகளில் பதிவு செய்யமுடியும். அதிக வாசிப்பின் மூலம் பல்வேறு எழுத்தாளர்களையும், அவர்களது நடை, அவர்களின் கதாபாத்திரங்களின் உருவாக்கம், பல்வேறு சமூக வாழ்க்கைச் சூழல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். வித்தியாசமாக, சுவாரஸ்யமாக எழுதவும் அறிய முடியும்.
எழுதும்
படைப்புகள் சொந்தப் படைப்பாக, பயனுள்ள படைப்பாக இருக்கும்போது, மக்கள் நாம் எழுதுவதை விரும்பிப் படிக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து எழுதும்போது உங்கள் எழுத்துகளை எல்லாருக்கும் பிடித்துவிடும். ஒருவரைத் தாக்கும் நோக்கிலோ, சாதகமாகவோ எழுதாமல் நியாயமான, உண்மையான படைப்புகளைக் கொடுக்கும்போது மக்களுக்கும் அது பயனளிக்கும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடாமல் சிறந்த படைப்புகளை ஓர் எழுத்தாளனால் தர இயலாது.
புகழ்பெற்ற
அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங், “எல்லா இடங்களிலும் படியுங்கள்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் எழுதுங்கள்” என்கிறார்.
எழுதுவதற்காகத் தினமும் நேரம் ஒதுக்கிய அவர், தான் எழுதுவதற்காகத் தனது வீட்டில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட மேசையில் எப்பொழுதும் எழுதுவதை வழக்கமாக்கியிருந்தார்.
எழுதும்
சூழ்நிலையை அறிவது மட்டுமல்ல;
ஒரு நல்ல எழுத்தாளனுக்குத் தன் எழுத்தில் எது சிறந்தது? எது தரமற்றது? என்று பிரித்தறியவும் முடியும். அவ்வாறு பிரித்தறிந்து தரமான எழுத்துகளை மட்டுமே மக்கள் முன் வைப்பர். ஒரு படைப்பாளி மிகப் பரவலாக அறியப்பட்டு, படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில்
வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடுகள் மேற்கோள்களாகக் காட்டப்படும் போது, வாசிப்பவர் சிந்தனையிலும் அவை தாக்கத்தை உருவாக்குகின்றன.
எவ்வாறு தொந்தரவு
கொடுப்பது?
“உங்கள் இதயத்தின் சுவாச மூச்சுகளால் காகிதத்தை நிரப்புங்கள்” என்றார்
பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். ஒரு படைப்பை உருவாக்கும்போது தன் எண்ண அலைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து எழுத வேண்டுமே தவிர, இது எல்லாராலும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால் எண்ண ஓட்டங்களின் விளைவுகள் எழுத்தோட்டத்திற்குத் தடங்கல் ஆகிவிடும். இந்த நிலையில் மற்றவர் கருத்திற்கும் முக்கியத்துவம் தந்து தவறுகளைத் திருத்திக்கொண்டால், ஒரு நல்ல எழுத்தாளராகச் சமூகத்தில் உங்கள் படைப்பு சிலரையாவது தொந்தரவு செய்தே தீரும்.
உங்கள்
படைப்புகள் கதையாக, கட்டுரையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக என எதுவாக இருந்தாலும்,
அந்தப் படைப்புக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அதனை எடுத்தியம்பும் விதத்தில் ஆழம் இருக்கவேண்டும். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். படைப்பின் ஆரம்பத்திலோ முடிவிலோ அன்றி, இடைப்பட்ட இடங்களிலோ மனத்தில் மெல்லிய நெருடலை ஏற்படுத்தவேண்டும். ஒரு படைப்பை வாசிக்கையில் வாழ்வின் சுயஒப்பீடு, ஓர் ஏக்கம், ஓர் எதிர்பார்ப்பு, தார்மீகக் கோபம் என ஏதாவது ஒருவகையில்
மனத்தைத் தொந்தரவு செய்ய வேண்டும். சிரிக்க வைப்பது நோக்கமென்றால், அதுவும் நகைச்சுவையாகத் தொந்தரவு செய்யும்.
சமூகப்
பார்வையோடு எழுதும்போது சமூக அவலங்கள் வாசிப்பவர் மனத்தில் மானசீகமாகக் கோபத்தை ஏற்படுத்தும். அதற்காக நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்து தன்னை மேம்படுத்திக்கொள்வது ((Update)) அவசியமான
ஒன்றாகும். குடும்ப வாழ்வின் மெல்லிய மற்றும் கடினத்தனமான உணர்வுகள், தீண்டாமை, பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் முதலான உள்ளடக்கங்கள் குறித்து நாம் படித்தது, பார்த்தது, கேட்டது யாவற்றையும் எழுத்தில் வடிக்கும்போது, வாசகர்கள் மனங்களை உலுக்கும்.
கதையென்றால், கதாபாத்திரங்களுக்குள் உள்ள முரண், வித்தியாசமான கதைக் கண்ணோட்டம், அழகான எழுத்து நடை உணர்வுகளைத் தூண்டவும், மர்மத்தை உருவாக்கி அதனை அறியும் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்யவேண்டும்.
மொத்தத்தில்,
ஓர் எழுத்தாளனின் எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியன குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்களுக்கு ஏற்படும் வகையில் கற்பனை வளமோ, வாசிப்பு ஞானமோ அவனுக்குள் பெருகியிருக்கவேண்டும்.
தொந்தரவின் விளைவுகள்
“வாளைவிட பேனா வலிமையானது” என்ற
சொற்றொடரை 1839-ஆம் ஆண்டில் எழுத்தாளர் எட்வர்ட் புல்வர்லிட்டன் முதன்முதலாகக் கூறினார். வாளால் பயத்தைக் காட்ட முடியும்; எழுத்தால் இதயங்களை வெல்ல முடியும். வன்முறையைவிட சிந்தனையும் எழுத்தும் மக்கள்மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். வாளின் சக்தி தோல்வி, தியாகம், இழப்புடன் முடிவடைகிறது. ஆனால், பேனா ஆன்மாவுக்கு உந்துதல், உத்வேகம், வளர்ச்சியைக் கொண்டு வருகிறது.
எழுத்து
என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல; உலகை ஊக்குவிக்கவும், வற்புறுத்தவும் மாற்றவும் கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவி. சிறந்த எழுத்தாளர்கள் புரட்சிகளைத் தூண்டுவதற்கும், சமூக விதிமுறைகளுக்குச் சவால் விடுவதற்கும், தனிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் தங்கள் எழுத்துகளைப் பயன்படுத்தினர்.
1963-இல் மார்ட்டின்
லூதர் கிங் ஜூனியர் எழுதிய ‘லெட்டர் ஃப்ரம் பர்மிங்காம் ஜெயில்’ என்ற கடிதம் அமெரிக்காவின் சிவில்
உரிமைகள் சட்டத்திற்கான ஆதரவை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்து அந்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தின் கருப்பொருளைத் தொட்டு விடுதலை உணர்வைத் தூண்டின. காந்தியின் எழுத்துகள் ஆங்கிலேயருக்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பிற்காக வாதிட்டன. இந்திய எழுத்தாளர்கள் பலரும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவினார்கள்.
யூத
இனப் படுகொலையின்போது தலைமறைவாக இருந்த ஆன் ஃப்ராங்க் என்ற யூதப்பெண் எழுதிய நாள்குறிப்பு, 1945-இல் அவர் இறந்தபிறகு ஹிட்லர் அடக்குமுறையின் இருண்ட அத்தியாயத்தை உலகுக்கு வெளிச்சமிட்டது. 1845-இல் ஃபிரடெரிக் டக்லஸ் எழுதிய ஒரு புத்தகம் அடிமைத்தனத்தின் கொடூரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிக்க கருவியாகச் செயல்பட்டது. கென்யாவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் வங்காரி மத்தாய், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பல புத்தகங்கள் எழுதினார்.
அவை ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றங்கள் கொண்டு வர உதவின. 2012-இல்
தாலிபான்களின் கொலைத் தாக்குதலுக்குத் தப்பிய மலாலா யூசுப் சாய் எழுதிய ‘நான் மலாலா’ என்ற நூல் 40-க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பெண்கள் கல்வி பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், மேலும் பலரை இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. இவை போன்று புரட்சிகரமான மாற்றங்கள் எழுத்துகளால் நிகழ்ந்தன.
எழுத்துலகம்
ஆழமான உணர்ச்சிகள், விரிவான சிந்தனைகள், அர்த்தமுள்ள பிரதிபலிப்புகள் நிறைந்தவை என்றாலும், அது வன்முறை மற்றும் சோகத்திற்கும் சாட்சியாக உள்ளது. ஆட்சியாளர்கள், வன்முறையாளர்கள், சனநாயக மற்றும் பாசிச விரோதிகள், சமத்துவ சமூகநீதி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கருத்துத் தொந்தரவுகள் எழுத்தாளர்களைப் பழிவாங்கின. பல ஆண்டுகளாகப் பல
பிரபல எழுத்தாளர்கள் அகால மற்றும் கொடூரமான மரணங்களைச் சந்தித்துள்ளனர். எழுத்தாளர்களின் சோக மரணங்கள் உண்மை, நீதி மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்காகத் தங்கள் இறுதி விலையைச் செலுத்தினர். ஸ்பெயின் நாட்டுக் கவிஞரும் எழுத்தாளருமான ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா எழுதிய காதல், மரணம், சமூக அநீதி கருப்பொருள் கொண்ட நூல்கள் ஆட்சியாளரைக் கோபப்படுத்தி, 1936-இல் அவரை விசாரணையின்றித் தூக்கிலிட வைத்தன. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
சால்வடார்
நோவோ என்ற மெக்சிகன் எழுத்தாளரின் பல படைப்புகள் மெக்சிகன்
அறிவுசார் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. 1974-இல் அவர் மரணம் மர்ம மரணமானது. டேனியல் கார்ம்ஸ் என்ற இரஷ்ய எழுத்தாளர் தனது படைப்புகளுக்காக சோவியத் ஆட்சியால் தொடர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். 1942-இல் அவர் நேரடியாக அல்லாமல் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டார். நைஜீரிய எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கென் சரோவிவா தனது எழுத்தாலும் போராட்டத்தாலும் 1995-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார். 2015-ஆம் ஆண்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதிய, பேசிய எழுத்தாளர் கல்புர்கி தன் வீட்டு வாயிலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.
மேற்கூறியவை
தங்கள் சொந்த வாழ்க்கையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எழுத்தைப் பயன்படுத்திய எழுத்தாளர்களுக்கு நேர்ந்த நல்லவை-கெட்டவையே; எனினும், அவர்கள் வரலாற்றுக்குள் வந்து நிற்கிறார்கள். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஒரு வரி கூட எழுதியவர் இல்லையாம்! ஆனால், அவர் பேச்சுகள் ஆட்சிப்பீடத்தை உலுக்கிப் போட்டதோடு, அவர் பகுத்தறிவு உரைகள் பின்னாளில் நூல் வடிவம் பெற்று பேசுபொருளாயின. அவர் நஞ்சுண்டு மரணிக்க வேண்டியிருந்தது.
இயேசு
பற்றிய நற்செய்தி நூல்கள் இன்னமும் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. இவை அவரால் எழுதப்பட்டவை அல்ல; எனினும், இயேசு ஒரே ஒருமுறை மண்ணில் எழுதிக் காட்டினார். அந்த எழுத்துகள் அன்றைய யூதர்களை மட்டுமல்லாமல், இன்றைய உலகத்தாரையும் சுயபரிசோதனை செய்வதற்கான உறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.
அழகு எனும் வார்த்தையைக் கேட்டதுமே நம் மனத்திற்குள் ஒரு குதூகலம் வந்து விடுகிறது. அப்படி என்னதான் அந்த அழகிற்குள் ஒளிந்து இருக்கிறது? அது எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன்னதம் என்பதால், அதைப் பற்றிய தேடலும், அதை ஒட்டிய கவிதைகளும் கற்பனைகளும் கதைகளும் சிந்தனைகளும்... இன்னும் சொல்லப் போனால் தத்துவங்களும் தங்கு தடையின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி இல்லவே இல்லை.
வெறுங்கல்
நமக்குக் கரடுமுரடாகத் தெரிகிறது. அந்தக் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் நமக்கு
அழகாகத் தெரிகிறது. அந்தச் சிற்பத்தைக் கல்லுக்குள் இருந்து எழுப்பிய மனிதன் அழகுற
இல்லையென்றாலும், அவனது எண்ணம் அழகுற இருந்ததால் சிற்பமும் அழகுற அமைந்தது. இதில்
‘எது அழகு?’ எனும் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது.
எனக்கு
அழகாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகாகத் தோன்றாது. அழகு என்பது கண்ணுக்குத் தெரியாமல்
ஒளிந்திருக்கும் ஓர் அபூர்வப் புதையல் போலத் தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். ஆனால்,
அந்தத் தேடலின் ஆழத்தில் ஒரு கேள்வி மெதுவாய் மிளிர்கிறது. அழகை அளப்பவர் யார்? மேலும்,
அழகைச் செதுக்குவது யார்? ஒன்றின்மீது வைத்திருக்கும் எண்ணங்களால் அது அழகாகத் தெரிகிறதா?
அல்லது அந்த அழகால் நம் எண்ணங்கள் அழகாகிறதா? என்பதுதான்.
முன்னொரு
காலத்தில் சில தத்துவஞானிகள், “அழகு என்பது நிலைத்து நிற்கும் அழியாமை; மேன்மையைத்
தாண்டி நிற்கும் இலட்சிய வடிவம்” என்று கூறினர்.
ஒரு
சிலையின் ஒழுங்கான சமநிலை, இசையின் இனிய ஒற்றுமை அல்லது ஒரு கோட்பாட்டின் நயமான அமைப்பு...
இதுதான், இப்படித்தான் என்று அழகைக் கணக்கிட்டுக் கூறுவது கடினம். எதையும் அதை நோக்கும்
கண்கள் மற்றும் எண்ணங்கள் அடிப்படையில் இந்த அழகு எந்த ஒரு வரைமுறைக்குள்ளும் இல்லாமல்
உருமாறிக்கொண்டே இருக்கும் ஒரு வடிவம். ஆனால், வரலாறு வேறு ஒன்றைச் சொல்கிறது. மனித
விருப்பங்கள் சில ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அழகைப் பற்றிய
பார்வையும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒரு காலத்தில் அழகாகக் கருதப்பட்டவை பின்னொரு
காலத்தில் கண்டுகொள்ளப்படாமலே மாறிவிடுகிறது. மிகச்சிறந்த கலையாக, ஓவியமாகக் கருதப்பட்டவை
பின்னொரு காலத்தில் மக்கள் கவனம் பெறாமல் வீணாகிவிடுகிறது. முன்பு உடல் பருமனோடு இருந்தவர்கள்
அழகாகத் தெரிந்தார்கள்; தற்போது மெல்லிய தேகம் கொண்டவர்கள்தான் அழகோவியங்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
இந்த மாற்றம் எப்படி?
காலமும் மனித எண்ணங்களும் அவ்வப்போது தனது பிடியை, பார்வையை மாற்றிக்கொண்டே இருக்கும்.
ஒரு சமூகத்தில் தேகம் வெளிர் நிறத்தில் இருப்பது அழகுறக் கொண்டாடப்படும்; மற்றொன்றில்,
கருகரு கார்மேக நிறம் கவனிக்கப்படும். அதையதை அவரவர் பார்வையிலே கண்டு மகிழ்வதுதான்
பேரழகு!
இதில்
ஏன் இந்த அளவீடு வந்து உள்ளே புகுந்து சண்டையிடுகிறது? இது போதாதென்று ஊடகங்கள் தங்களின்
சில புனைவுகளாலும், திட்டமிட்டத் தரநிலைகளாலும் நம் பார்வையை நம்மை அறியாமலே திருடி,
‘இதுதான் அழகு’ என்று நம்மை நம்பவைத்து, மனித இனத்தின்
பன்முகப் பண்புகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு அழகின் வரையறையைச் சுருக்குகின்றன. ஆனால்,
உண்மையான அழகின் அளவுகோல் தனிப்பட்டவர்களின் கருத்துகளில் அல்லாமல், அதை நாம் அனுபவிக்கும்
உள்ளார்ந்த எண்ண அதிர்வில்தான் அடங்கியுள்ளதாம்!
குழந்தையின் அழுகுரல், குளிரில் நடுங்கும் குரல்,
கடலலை, அந்தக் கடலலை மோதிப் பாறைகள் எழுப்பும் சத்தம், கடற்கரைக் காற்று, வெண்பனி நிலவு,
கன்னிப் பெண்ணின் கடைக்கண் பார்வை, நாம் மதிக்கும் ஒருவரின் கரிசனப் பார்வை... இவை
எதுவும் அழகு எனும் அளவீட்டில் பொருந்தாது. ஆனால், நம்மை அழகுற அமைதிப்படுத்தி ஆழமாக
உணர உதவுகிறது. இவ்வகையில், அழகு என்பது உலகமும், நம் உள்ளமும் நடத்தும் ஓர் இரகசிய
உரையாடல். ஒவ்வொரு பார்வையாளருக்கும் அது தனித்துவமானது. இதுதான் - இது மட்டும்தான்
அழகு என ஒன்றை நம்முள் திணிக்கும்போது, அதைப்பற்றி நாம் மனத்தில் வைத்துள்ள கொஞ்ச நஞ்ச
மதிப்புகூட இல்லாமல் போய்விடும். அழகு என்பது எண்ணமும் உள்ளமும் ஒருசேர இணைந்து இடமளிக்கும்
ஓர் அருங்கொடை!
நமக்கெல்லாம்
தெரிந்த ‘லைலா-மஜ்னு’ கதையில், தனது இளவரசன் காதலித்து அனுதினமும்
அவளையே நினைத்து உருகும் லைலாவைப் பார்த்தே ஆகவேண்டும் எனச் சொல்லி அவளைப் பார்த்தபோது,
அரசருக்கு அவளது தோற்றம் சகிக்கவில்லையாம். அப்போது அவரது அமைச்சர் சொன்ன வார்த்தை
அழகுக்கு மேலும் அழகு சேர்க்கக்கூடியதாகும். “மன்னரே லைலாவைப் பார்க்க உங்களுக்கு மஜ்னுவின்
கண்கள்வேண்டும்.”
இங்கு
அழகை யார் மதிப்பிட்டது என்று பார்த்தால், அந்த அமைச்சர்தான். காதலன் - காதலி இடையே
அழகு என்பதைத் தாண்டி, ஈர்ப்புதான் அந்த அழகை மெருகூட்டுகிறது. எந்த ஓர் அழகையும் மதிக்கும்
அழகு பேரழகாக மாறுகிறது. ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்துவிட்டால், அவர் திட்டுவதுகூட
தித்திப்பாய் இருக்கும்; அடிப்பதுகூட ஆனந்தமாய் இருக்கும்; முறைப்பதுகூட முத்தாய்ப்பாய்
இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆத்திரப்படுவதுகூட அழகாகத் தெரியும்.
கரடுமுரடாய்
நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதன் பயன் அதிகமாய் இருந்தால் அதுவும் நமக்கு அழகாகத்தான்
தெரியும்.
பிறகு
எப்படித்தான் அழகை அளவிடுவது? தரத்தை அளவிடலாம், அழகை எப்படி? அழகை ஒரு வரையறைக்குள்
அடக்கிவிட முடியாது. அப்படியா, ஆம்! அது பல எண்ணங்களையும் காரணங்களையும் காரணிகளையும்
உள்ளடக்கியது. ஒழுங்கற்ற ஓசை இரைச்சலைத் தருகிறது, ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை இனிமையான
இசையாக மாறுகிறது. இங்கு அழகுக்கு வலு சேர்த்தது ஒழுங்குதான்.
பருவப்
பெண்கள் பார்ப்பதற்கு அழகு என்பதைத் தாண்டி, ஏதோ ஓர் ஈர்ப்புதான் அந்த அழகுக்கு அழகு
சேர்க்கிறது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிபவர், மற்றொருவர் கண்ணுக்கு அப்படித் தெரிவதில்லை.
இங்கு அழகைத் தீர்மானிப்பது ஈர்ப்புதான். இப்படி ஒருசில காரணிகளும் காரணங்களும் ஒருசேர
அமையும் போது, அந்த அழகு மேன்மையும் மென்மையும் கொண்ட அழகாக அளவிடப்படுகிறது.
பல
நேரங்களில் கட்டுக்கோப்புதான் பேரழகாக உணரப்படுகிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும், ஒரு
கட்டுக்கோப்போடு நடக்கும்போது அது அழகாக அமையும். கட்டுக்கோப்பு கலையும்போது எரிச்சலும்,
வேண்டாத விளைவுகளும் ஏற்படும். சட்டம்-ஒழுங்கு சீர்கெடும். நேர்த்தியும் ஒழுங்கும்
கட்டுக்கோப்பும் ஒருங்கமையும் போது அளவில்லா அழகும் ஆனந்தமும் நிரம்பி வழியும்.
அழகை
அளவிடுதல் என்பதன் மிகச் சரியான வழி, அதை வெறும் தோற்றத்தில் மட்டுமே அல்லாமல் அதன்
பயன், நோக்கம், குணநலன், ஈர்ப்பு, இசைவு என்பன போன்ற கலவைகள் கொண்ட வரையறையோடு பார்ப்பதுதான்
சரியாக அமையும். மனித அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு அதை அவ்வப்போது மாற்றி அமைத்துவிடும்.
அழகை அளப்பதற்கான உரிமையை யாரும் முழுமையாகக் கொண்டிருக்க முடியாது. அதேநேரத்தில்,
விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மாறும்; தரநிலைகள் மாறும்; கலாச்சாரம்
மாறும்; பண்பாடு மாறும்; மனித எண்ணங்கள் மாறும். ஆனால், அழகு எப்போதும் இருக்கும்.
அளக்க முடியாத வகையில் அது உயர உயர வளர்ந்துகொண்டே இருக்கும். பிளக்க முடியாத வகையில்
மேலும் மேலும் ஆழமாகச் சென்றுகொண்டே இருக்கும்.
அழகின்
உண்மையான அளவுகோல் எது? எதெல்லாம் ஆழமான மற்றும் தனிப்பட்ட முறையில் நம் இதயத்தோடு
இணைந்து, ஆழ்மன எண்ண உணர்வோடு இணைகிறதோ அதுதான் அழகு. அது மட்டும்தான் அளக்க முடியாத
தன்மையோடு எப்போதும் நிலைத்திருக்கும். உயர்ந்த எண்ணங்கள் தனி அழகு; அதன் செயல்வடிவம்
மற்றுமொரு கூடுதல் அழகு! அவரவருக்கு உரிய அழகினை உயரிய அழகென நினைத்துக்கொள்வதில் தவறொன்றும்
இல்லை.
(தொடரும்)
ஒரு நல்ல குதிரை எப்படி இருக்கும்? தகுதியான குதிரையை அடையாளம் காண்பது எப்படி? குதிரையின் உடல் அமைப்பு, நடை, இயக்கம், ஆரோக்கியம், குணம், இனம் (breed), வயது, கால்களின் அமைப்பு என்பதே தகுதியான குதிரையின் முன் முத்திரையாகும். தகுந்த குதிரையை மதிப்பீடு செய்வதில் உள்ள பல நடைமுறைச் சிரமங்கள் நேர்மையற்ற குதிரை வியாபாரத்திற்கு அடிகோலுகிறது. சிக்கல்மிகு குதிரை வியாபாரத்தில் பேரங்கள் அடிப்படைத் தர்மமும் அறமும் இன்றி நடக்கின்றன.
அதுபோலவே,
அரசியலில் தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்காமல் வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்குவதே குதிரைபேரமாகும்.
குதிரைபேர அரசியலில் ‘நரிகள் பரிகளாவது’
அதிர்வான தருணமாகும்.
கிராமப்புறங்களில் ‘நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்’
என்பார்கள்.
2024-இல் நடைபெற்ற மாநாட்டில் திரு. விஜய், “ஊழல் இல்லாத ஆட்சி தருவோம், குதிரைபேர அரசியல் செய்யமாட்டோம்” என்றார்.
இன்றோ அ.தி.மு.க.வின் மாநிலங்களவை
உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் இன்பதுரை அவர்கள், “எங்கள் பட்டியில் இருந்து, ஆடுகளைத் திருடி விட்டார்”
என்கிறார்.
சுதந்திர
இந்தியாவில் 1952-இல் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளைச் சேர்த்த சென்னை மாகாணத்தில் 375 தொகுதிகள் இருந்தன. காங்கிரஸ் 152 இடங்களை வென்று ஆட்சியமைக்க இயலாமல்
திணறியது. நியமனச் சட்டமன்ற உறுப்பினர் 11 பேரையும், சுயேட்சை உறுப்பினர்கள் 30 பேரையும், கிசான்மஸ்தூர் பிரஜா கட்சியின் 19 பேரையும், காமன் வெல்த் கட்சியின் 6 பேரையும் கட்சிகளை உடைத்து இராஜாஜி முதல்வரானார். சட்டமன்றத் தேர்தலில் நிற்காத இராஜாஜி அவர்கள், சட்ட மேலவை உறுப்பினராகி தன் பதவியைத் தக்கவைத்தது முதல்
வரலாறு.
1991-1996 நரசிம்மராவ் ஆட்சிக்
காலம். பாரதிய ஜனதா கட்சி 1993-இல் ஆளும் அரசுமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது. 244 என்ற எண்ணிக்கை கொண்ட காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும்,
ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்
எண்ணிக்கைகளாலும் தப்பிப் பிழைக்கிறது. அவர்களுக்கு 3.5 கோடி இலஞ்சம் கொடுத்தாக வழக்கு, கைது என நடவடிக்கைகள் நகர்ந்தன.
முடிவில்,
அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 105 (2)-இன்படி பாராளுமன்ற விவகாரங்களில் பிற சட்ட அமைப்புகள் தலையிட முடியாது என்ற அடிப்படையில் வழக்குகள்
நீர்த்துப் போயின. அனைவரும் விடுதலை பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் குதிரைபேர அரசியலைப் பேசிய பா.ச.க.
‘தாமரை நடவடிக்கை’
(operation lotus) என்ற பெயரில்
இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குதிரைபேர அரசியல் நடத்தியே ஆட்சிக்கு வந்தது.
2018 தேர்தலில், மத்தியப்பிரதேசத்தில்
உள்ள 230 தொகுதிகளில், காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ச.க.
109 இடங்களிலும்
வென்றன. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வரானார். 2020, மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வழி 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து பா.ச.க.
ஆட்சிக்கு வந்தது. பா.ச.க.வின் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். நரசிம்மராவ் காலத்தில் 3.5 கோடியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விலை பா.ச.க.
காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் விலையாகப் பத்து மடங்கு உயர்ந்து 35 கோடியாக உயர்ந்தது என்பதே காலக்கொடுமையாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகள் எப்பொழுதும் ஒரே சிந்தனை அடிப்படையில் என்பதால் நாம் இந்த வட இந்திய புகழ்
‘ஆயா ராம், காயா ராம்’ அதிசயங்களைக் கண்டதில்லை. 2026 தேர்தல் முடிவுகள் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர் பார்ப்போரைக் கூட ஒரு மாதம் செய்தி தொலைக்காட்சிகளைப் பார்க்க வைத்தது காணாத நிகழ்வு.
எனது
பேத்தி தமிழ்நாட்டில் வசிப்பவர் இல்லை என்பதால் விஜய் அவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. கோடை விடுமுறைக்கு வந்தவள் கேட்கிறாள்: “ஏன் விஜய் எங்கோ போகிறார், வருகிறார்; ஏன் சோகமாய் இருக்கிறார்?” என ஆர்வம் கொள்கிறாள்.
அவள் கேட்பது ஆளுநர் மாளிகைக்கு விஜய் ஆட்சி
அமைக்க உரிமை கோரும் ஒரு வார நடை குறித்ததாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகளில் த.வெ.க.
108 தொகுதிகளை வென்றது. த.வெ.க.
தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியை இராஜினாமா செய்தார். த.வெ.க.
பலம் 107 ஆனது. அதிலும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்களிக்கும் நாளன்று வாக்களிக்க நீதி மன்றத்தில் தடை இருந்தது. பேரவைத் தலைவர் வாக்களிக்க முடியாத நிலையில், 105 உறுப்பினர்கள் என்பது த.வெ.க.வின் உண்மையான பலமாகும்.
காங்கிரஸ் கட்சி ‘என்.டி.ஏ.-வுடன்
எந்தத் தொடர்பும் கூடாது; வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணி ‘என்ற நிபந்தனையில், த.வெ.க.
கேட்காமலே தனது 5 உறுப்பினர்களின் ஆதரவைத் தந்தது. நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையில் இரு பொதுவுடைமைக் கட்சிகளின் தலா இரு உறுப்பினர்களும் ஆளும் அரசை ஆதரித்தனர்.
‘ஆட்சியில் பங்கு,
அதிகாரத்தில் பங்கு’ என்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் நீண்ட விவாதங்கள், விளக்கங்களுக்குப் பிறகு அமைச்சரவையில் அங்கம் பெற்றார்கள். தனது 60 ஆண்டு காலக் கூட்டணியை மறந்துவிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் த.வெ.க.
அரசில் பங்கு பெற்றார்கள். அ.தி.மு.க.வின் புரட்சிகர
அணியில் 25 பேர் ஆளும் அரசை ஆதரித்தனர். மந்திரி பதவி என்ற அவர்களது கனவு தகர்ந்துள்ளது. 4 பேர் இராஜினாமா செய்த நிலையில், 15 பேர் எடப்பாடியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தாய்க்கழகம் திரும்பிவிட்டனர்.
மன்னார்குடியில்
வென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரே சட்டமன்ற
உறுப்பினர் த.வெ.க.
அரசிற்கு ஆதரவு அளித்தார். இது குறித்துப் பேசிய அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,
த.வெ.க. ஆட்சி
அமைக்க ஆளுநரிடம் போலிக் கடிதங்கள் வழங்கியதாகவும், குதிரைபேரங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில்
குதிரைபேர அரசியல் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் சட்டமன்றம் முதல் பொதுவெளிகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆளும் அரசு திறந்த விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. போதிய விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும்.
தமிழ்நாடு
பாரதிய சனதா மேனாள் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விருப்பத்திற்கு மாறாக எம்.எல்.ஏ.க்களை விலைபேசி
த.வெ.க. தற்போது
நடத்துவது குதிரைபேர அரசியல் அல்ல; கழுதைபேர அரசியல்” என்கிறார்.
இந்திய
ஒன்றிய அரசு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடக்கிறது எனில், தன் மத்தியப் புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத் துறையைக் களம் இறக்கும். தமிழ்நாட்டில் ஏன் மௌனம் காக்கிறது என்ற கேள்விகள்
பொதுமக்களிடம் எழுகிறது. மேலும், இந்தப் பொய்க்கால் குதிரையின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
“நாம் கொண்டாடும் இன்றைய வெற்றி, ஒரு முதல்படியே. மிகப்பெரிய வெற்றிகளையும், மாபெரும் சாதனைகளையும் இனிவரும் காலங்களில் எட்டவிருக்கிறோம் என்பதே உண்மை. நமக்குக் கிட்டிய இம்மாபெரும் வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நம்மிடம் வலு உள்ளதா? எதிர்வரும் காலங்கள் எழுப்பும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலை வளர்த்துள்ளோமா?”
(ஜவகர்லால் நேரு அவர்கள்
இந்தியச்
சுதந்திர
தினத்தன்று
ஆற்றிய
உரையின்
ஒரு
பகுதி)
பண்டித
நேரு அவர்கள், விடுதலை பெற்ற இந்தியா எதிர்கொள்ளும்
சவால்களைச் சந்திக்கும் ஆற்றலைப் பெறவேண்டும்
என்று விழைகிறார். இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியா ஓர் ஒருமித்த சனநாயகக் குடியரசாகத் திகழ முடியுமா? என்ற கேள்வி உலகில் பல இடங்களில், பலராலும்
எழுப்பப்பட்டது.
“இதுவரை பரீட்சித்துப் பார்க்காத (untried) அரசு, ஏற்றுக்கொள்ள முடியாத நாட்டுப் பிரிவினை, தெளிவற்ற அரசியல் அணிகள், நாடு எதிர்கொண்ட வகுப்புவாத வன்முறைகள், சமூகப் பிளவுகள்”
- நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்.
இத்துணை
அளவுள்ள பிரச்சினைகளைத் தாண்டி, இந்தியா ஒரு சனநாயகக் குடியரசாகக் கட்டப்பெறல் சாத்தியமா? என்ற கேள்விகளெல்லாம் எழுந்த நிலையிலும், இந்தியா இன்றும்
சனநாயகக் குடியரசாகவே நிற்கிறது.
“இந்தியா எனும் நாடு பல்வேறு வேற்றுமைகளுள்ளும், ஒரே அரசியல் அலகாக (Political unit),
அதுவும் சனநாயக அமைப்பாகச் செயல்படும் சனநாயகமாக இயங்கவே செய்கிறது”
என்றார் அமர்த்தியாசென் (1999).
இந்தியத்
தலைவர்கள் கனவு கண்ட சனநாயகம், இச்சனநாயகத்தை உள்ளீடாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வகையில் உருவான சனநாயக நிறுவனங்கள் - இவையெல்லாம் வலுவாகவே உருவாக்கப்பட்ட பின்பும், இந்நிறுவனங்கள் மக்களில் பலருக்கும் எட்டும் (access) தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படினும், இன்னும் சாத்தியப்படாதது ஏன்?
ஐக்கிய
நாட்டு அவை மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 1948-ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவாயிற்று. உலகில் விடுதலை பெற்ற நாடுகளில் பல இப்பிரகடனத்தின் முக்கியச் சரத்துகளை
அந்தந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இணைத்துக்கொண்டன. விடுதலை பெற்ற இந்தியா உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்திலும் உலகளாவிய பிரகடனத்தின் கூறுகள் பல இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாட்டு
அவையின் இவ்வரிய பிரகடனத்தை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
இப்பிரகடனம்
பொதுவான மனித உரிமைப் பாதுகாப்பு அரணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மானுட உரிமைகள் மறுக்கப்பட்ட அனைத்துச் சமூகப் பிரிவினருக்குமான மனித உரிமைகளைப் பேணுவதற்கான மனித உரிமைச் சாசனங்கள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எனப் பல பரிமாணங்களில் மனித
உரிமைப் பாதுகாப்புக்கென உரிமைகள் வகுக்கப்பட்டன.
சனநாயகச்
சமூகத்தின் பாதியளவான பெண்கள்மீது நிகழ்த்தப் பெறும் பாகுபாட்டிற்கு எதிரான உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உரிமைகள், அகதிகள், பூர்வீகக் குடிகள், கலாச்சார உரிமைகள், பொருளாதார உரிமைகள், குடியுரிமைகள் எனப் பல்வேறு உரிமைகள் சட்டம்போல வகுக்கப்பட்டதுடன், ஐ.நா.வின்
உறுப்பு நாடுகள் இவ்வுரிமைகளைக் காப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டன. இவ்வுரிமைகள் மீறப்படாமலிருக்கக் கண்காணிப்பு அமைப்புகளும் உருவாயின.
ஐ.நா. சபை மூலம் உருவான கண்காணிப்பு அமைப்புகள் தேசிய அளவிலும், உரிமைகள் மீறப்பெறாமல் கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசியப் பெண்கள் ஆணையம் என உரிமைப் பாதுகாப்பு
ஆணையங்கள் போன்றவற்றைச் சட்டப் பூர்வமாகவே உருவாக்கின. மனித உரிமை வழக்குகளை நடத்துவதற்கான தனி நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன.
‘இவ்வளவு பெரிய முன்னுரை இக்கட்டுரைக்கு என்ன தேவை?’ என்ற கேள்வி வாசகர்களிடம் எழுந்தால், அதில் தவறொன்றும் இல்லை.
இந்தியச்
சனநாயகக் குடியரசுக்கு இன்று அகவை எழுபத்தைந்து. பெருத்த கனவுகளோடும் நம்பிக்கையோடும் உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசு இன்றும் சிதையாமல் காப்பாற்றப்படுகிறது என்று நம்புகிறோம்.
மகாத்மா நம்பினார்; நேரு நம்பினார்; அம்பேத்கரும் நம்பினார். நாம் கனவு கண்ட ‘சனநாயகச் சமயச் சார்பற்ற இந்தியா’ இன்றும் வடிவ (forus) அளவில் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலேயே இச்சட்டம் இந்துப் பண்பு (un Hindu) இல்லாதது என்று மதத் தீவிரவாதம் பேசிய சங்கப் பரிவாரங்களால் இகழப்பட்டது. உலகில்
மிகப் பெரிய சட்ட வல்லுநராக மனுஸ்மிருதியைத் தந்த மனுவைத்தான் கோல்வால்க்கர் புகழ்ந்தார்.
இன்னும்
இச்சாசன வடிவை, சாசனம் தரும் உள்ளடக்கத்தை நம்பாத ஓர் அமைப்பை இந்தியச் சனநாயகக் குடியரசை ஆளும் பொறுப்பேற்ற பின்பு, அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று ஆட்சிக் கட்டில் ஏறவேண்டிய நிலையில், இந்தியச் சனநாயகம் காப்பாற்றப்பட்டதாக நாம் நம்பலாமா?
சட்டத்திற்குட்பட்டு
ஒரு நிகழ்வைத் தவறாது நடத்திக் காட்டவேண்டிய சூழலில், இன்றைய ஆட்சியாளர் ஏற்கும் நிலைப்பாடு சனநாயக நெறிமுறையைக் காக்குமா? இது நாடகமில்லையா? நாளும் இன்றைய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், புதிய சட்டங்கள் அனைத்தும் மதவாதக் கருத்தியலோடு ஒத்துச் செல்கின்றன எனும்போது, சனநாயகத்திற்கு இங்கு என்னதான் வேலை?
சனநாயகம்
உள்ளடக்கும் அனைத்து விழுமியங்களும் குறுகிய அரசியல் நோக்கில் விலை போகும்போது, சனநாயகம் குடிமக்களின் சம பங்கேற்பை உறுதிப்படுத்தும்
வகையில் தரப்பட்ட தேர்தல் முறையும்கூட குடிமக்களில் ஒரு பகுதியினரால் அவமதிக்கப்பெறும்போது சனநாயகம் எங்கே?
மனித உரிமைக்
கலாச்சாரம்
சனநாயகம்,
சனநாயகக் குடியரசு என்பன வெறும் சொல்லாக்கங்கள் அல்ல; ஒரு வாழ்வியல் நெறி. இவ்வாழ்வியல்நெறியைச் சட்டங்களும் சாசனங்களும் மட்டும் காக்கமுடியாது. மனித உரிமைகளைக் காக்க உலகம் முழுவதும் பாதுகாப்புச் சாசனங்களும் சட்டங்களும் உருவாயின. ஏன், நிறுவனங்களும் உருவாயின. இவ்வளவு
பாதுகாப்பு அரண்கள் உருவான பின்பும் சட்டங்களும் சாசனங்களும் உருவாக்கப்பட்ட பின்பும் மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்பதுதானே உண்மை!
இந்திய
அரசமைப்பின் விதி 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதன்
உண்மை என்ன? நாளும் பொழுதும் திராவிடத்தின் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தீண்டாமையை வன்முறையாக வர்ணித்தவர் மதவாதியால் கொல்லப்படுகிறார். பெண்ணடிமைத்தனம் ஒழியவில்லை. மதவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதச்சிறுபான்மையினர்... இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.
மனித
உரிமைப் பாதுகாப்பிற்கென மிகப்பெரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்த ஐ.நா. அவை,
இரண்டாயிரத்தின் இறுதியில் உலக நாடுகளைக் கூட்டி,
மனித உரிமைகளின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய முனைந்த போது, ஐ.நா.வும்
உலக நாடுகளும் அதிர்ந்து போயின.
மனித
உரிமைகள் காக்கப் பெறவில்லை என்றாலும் கூட பரவாயில்லை; மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்ற செய்திகளும் தரப்பட்டன. எனவே, ஐ.நா. ஒரு
முடிவைத் தந்தது. உரிமைகளைச் சட்டங்களாலும் சாசனங்களாலும் காக்க முடியாது.
உரிமைகள்
மனித வாழ்வின் வாழ்வியல் நெறியாக, மக்களின் வாழ்வோடு இணைந்த ஒரு கலாச்சாரமாக மாறாதவரை உரிமைகள் சட்டப் புத்தகத்தில் மட்டுமே இடம்பெறும். மனித உரிமைகள் ஒரு பண்பாடாக மாறவேண்டுமானால், பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு மனித உரிமைகளைக் கல்வியாகக் கொண்டு செல்ல ஐ.நா. அறிவுறுத்தியது.
அரசமைப்பே கலாச்சாரமாக...
அரசமைப்பும்,
அரசமைப்பின் முகப்புரையும் புரட்சிகரமானது. முகப்புரையின் சனநாயகம், சமமின்மை, சமயச் சார்பின்மை, இறையாண்மை, குடியரசு... எவ்வளவு அரிய விழுமியங்கள்! இந்திய அரசமைப்பில் மிகத் தெளிவாகவே இடம்பெற்றுள்ள அரிய பொக்கிசங்கள்! தங்க முலாம் பூசப்பட்ட ஒரு படிவத்தில் எவ்வளவு நாள் வைத்துக் காப்பாற்றப் போகிறோம்? இம்முகப்புரையின் உள்ளடக்கத்தை மக்கள் வாழ்வியல் அறமாக மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறோம்?
அரசியல்
பங்கேற்பில் தயக்கம் காட்டலாம்; பண்பாட்டுத்தளத்தில் செய்யவேண்டிய பணி நிறையவே உள்ளது. நிறையவே செய்வதற்கான வெளியும் நிறைய உள்ளது. செய்ய என்ன தயக்கம்?
குடிமைச்
சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், சமய ரீதியான அமைப்புகள், திரு அவையின் பல்வகைப் பணித்தளங்கள் இப்பணியை முன்னெடுக்க முடியும்.
மனித
உரிமைப் பணி ஏதோ ஒரு தனித்த நிறுவனம் சார்ந்த பணி மட்டுமல்ல; அனைத்துக் குடிமைச் சமூக அமைப்புகளுக்குமானது. அனைவரும் இப்பணியை முன்னெடுக்கும்போது சனநாயகம் மக்கள்
கலாச்சாரமாய் மாறும்.
இன்றைக்கு
மதவாத அரசு கலாச்சாரத் தளத்தை அரசியல்மயமாக்கி, உண்மையைத் திரித்து மக்களைத் திசைதிருப்பி வருகிறது. மக்கள் மயப்பட்ட இப்பொய்மைகளை, இப்புனைவுகளை உடைத்து மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல
வேண்டிய கட்டாயம் நிறையவே உள்ளது.
இவ்வுண்மையில்
நாம் தெளிவு காட்டினால், திடீரென்று தோன்றி அதிர்ச்சி காட்டும் வெற்று அரசியல் வளர்ச்சி கண்டு அச்சம் கொள்ளும் அவசியம் இருக்காது.
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை
அன்பார்ந்த குருக்களே,
துறவிகளே
மற்றும்
சகோதர
சகோதரிகளே!
நம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அமைதியும் உங்களுடன் இருப்பதாக!
ஒவ்வொரு
தலைமுறையும் தனக்கே உரிய போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவாலானது மனித வரலாற்றிலேயே இதுவரை எண்ணிப் பார்த்திராத ஒன்றாகும். இதற்கு முன்பு எந்தவொரு தலைமுறையும் இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தோடு இணைந்தும், அதே நேரத்தில் இவ்வளவு தனிமையோடும் வாழ்ந்ததில்லை. இத்தலைமுறைக்குத் தகவல்கள் நிறைந்திருந்தாலும் ஆழமான சிந்தனையின்றித் தவிக்கிறது. வெளித்தோற்றத்தில் வீரியமிக்கதாகத்
தோன்றினாலும், அகத்தில் பலவீனமான நிலையில் உள்ளது. நவீனத் திரைகளான திரைப்படம், கைப்பேசி, சமூக ஊடகங்கள் அல்லது எண்ம (டிஜிட்டல்) பொழுதுபோக்குகள் என எதுவாக இருந்தாலும்,
அவை கண்ணுக்குத் தெரியாத வகுப்பறையாகவும், அமைதியான பேச்சாளராகவும், உணர்வுகளை வடிவமைக்கும் கலைஞனாகவும், கலாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சர்வாதிகாரியாகவும் இன்று மாறியுள்ளது.
இன்றைய
இளம் மனங்களுக்குத் தொடர்ச்சியாக ஊட்டப்படுவது ஞானம் அல்ல; மாறாக, சலனங்களும் தூண்டுதல்களுமே. உண்மை அல்ல; வெறும் பிம்பங்களே. பகுத்தறியும் திறன் அல்ல; மாறாக, உணர்ச்சிப்பூர்வமான தூண்டல்களே! திரை என்பது ஒரு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது. அதுவே ஆசைகளை வடிவமைக்கிறது, அடையாளங்களைக் கட்டமைக்கிறது, இலக்குகளை உற்பத்தி செய்கிறது, மேலும், ஒழுக்கநெறி உணர்வுகளையும், அவர்களின் தலைமைத்துவத்தையும் கூடத் தீர்மானிக்கிறது.
இன்றைய
இளைஞர்களில் பெரும்பாலோர் எதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்வதில்லை; மாறாக, திரைகளின் வழியேதான் அதனை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை என்பதே பிம்பங்கள், தற்காலப் போக்குகள் (trends), இணையத்தில் பரவும் தற்காலிக உணர்வுகள், சினிமா கற்பனைகள் மற்றும் எண்மத் தொழில்நுட்ப அங்கீகாரங்கள் ஆகியவற்றின் மூலமாகவே அவர்களுக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கையின் இயல்பான போராட்டங்களான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுமை, நிராகரிப்பு மற்றும் பொறுப்பேற்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் துணிவைப் பலர் மெல்ல இழந்து வருகின்றனர்.
மாற்றங்கள்
என்பவை உடனடியாக, வியத்தகு முறையில், உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே நிகழும் என்ற ஆபத்தான மாயை நம் இளைஞர்களிடையே பரவி வருகிறது. திரைப்படங்கள் நாயகத்தனமான குறுக்கு வழிகளை நல்வாக்காகக் காட்டுகின்றன. சமூக ஊடகங்கள் உழைப்பற்ற அங்கீகாரத்தை அள்ளித் தருகின்றன. எண்மத் தொழில்நுட்பக் கலாச்சாரம் என்பது நற்பண்பை விடத் தோற்றத்திற்கும், நிதானமான சிந்தனையைவிட உடனடி எதிர்வினைக்கும், நேர்மைத்தனத்தை விடப் புகழுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சகிப்புத்தன்மையைவிடத் தப்பித்தலையும், வாழ்வின் சாரத்தைவிடத் தற்காலிகச் சலனங்களையும், நற்பண்பைவிடத் தன்னை வெளிப்படுத்துவதையும் மட்டுமே முதன்மையாகத் தேடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்; மாறாக, உங்கள் மனம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடையுங்கள்” (உரோ
12:2) என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புனித
பவுல் நம்மை எச்சரித்துள்ளார். இன்று நாம் சந்திக்கும் நெருக்கடியும் முற்றிலும் இதுவே; சிந்தனைகள் இங்குப் புதுப்பிக்கப்படுவதில்லை; அவை நிரலாக்கம் (programmed) செய்யப்படுகின்றன.
சமூகத்தின் உணர்ச்சிமயமாக்கல்
திரைக்
கலாச்சாரத்தின் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்று, பொது வாழ்க்கையை உணர்ச்சிமயமாக்குவதாகும். உணர்ச்சிகளைத் தூண்டும் பிரச்சினைகள், வியத்தகு கதையாடல்கள், இணையத்தில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள் (hashtags), சினிமா முழக்கங்கள் மற்றும் கூட்டு உத்வேகம் ஆகியவற்றால் இளைஞர்
மிக எளிதாகத் திரட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் நீண்ட கால எதிர்காலம், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல், மொழி, கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நாகரிகப் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகள் எழும்போது இதேபோன்ற ஆற்றல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. இது, எதிர்வினை ஆற்றக்கூடிய ஆனால்,
நிதானமாகச் சிந்திக்காத; கூட்டமாகக் கூடக்கூடிய ஆனால், ஒருங்கமையாத; போராடக்கூடிய ஆனால், விடாமுயற்சியுடன் நிலைத்திருக்காத ஒரு சமூகத்தையே உருவாக்குகிறது.
ஓர்
ஆரோக்கியமான சமூகத்திற்குக் கேள்வி கேட்கக்கூடிய, பகுத்தாயும் திறன் கொண்ட, நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்ட, ஆரோக்கியமாக விவாதிக்கவும் விமர்சனப் பூர்வமாகச் சிந்திக்கவும் திறன் கொண்ட இளைஞர் தேவைப்படுகிறார்கள். அதற்கு மாறாக, உணர்ச்சித் தூண்டல்களாலும் டிஜிட்டல் போக்குகளாலும் மட்டுமே இயக்கப்படும் ஒரு தலைமுறையை உருவாக்கிவிடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வாசிப்புப் பழக்கம், தத்துவார்த்தச் சிந்தனை, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் ஒழுக்கம் ஆகியவற்றின் வீழ்ச்சி மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. “பேதைகள் எதையும் நம்புவர்; விவேகிகளோ தங்கள் நடையின்மேல் கண்ணாயிருப்பர்” என்கிறது
நீதிமொழிகள் (14:15).
இன்று அந்த விவேகம் மறைந்து வருகிறது; பகுத்தறியும் திறன் பலவீனமடைந்து வருகிறது; ஞானத்தின் இடத்தை ஆரவாரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பகுத்தறிவை விட உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திசை திருப்புவது எளிதாகிவிடுகிறது. ஆழமான கொள்கைகளின் இடத்தைத் தற்காலப் போக்குகள் மாற்றியமைக்கும்போது, உண்மை என்பது பலவீனமாகி விடுகிறது. கல்விக்கு மாற்றாகப் பொழுதுபோக்கு அமையும்போது, ஒட்டுமொத்த நாகரிகமே பாதிப்பிற்குள்ளாகிறது.
துன்பங்களைக்
கண்டு
அஞ்சும்
ஒரு
தலைமுறை
இன்றைய
நம் இளையோர் வசதி வாய்ப்புகளில் வளர்ந்து வருகிறார்கள்; ஆனால், சவால்களைத் தாங்கும் மனவலிமையில் (resilience) பெரும்பாலும் சுருங்கிப் போகிறார்கள். எண்மத் தொழில்நுட்ப உலகம் என்பது வலிகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது.
அர்ப்பணிப்பு
இல்லாமல் எந்தவொரு நாகரிகமும் கட்டியெழுப்பப்படவில்லை. ஒழுக்கநெறி இல்லாமல் எந்தவொரு புனிதரும் உருவாகவில்லை. துன்பங்களைச் சந்திக்காமல் எந்தவொரு தலைவனும் முதிர்ச்சியடையவில்லை. கிறிஸ்துவே, “என்னைப்
பின்பற்றிவர விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (லூக்
9:23) என்று முழங்கினார். இன்றைய எண்மத் தொழில்நுட்பக் கலாச்சாரத்தில்
சிலுவை என்பது நாகரிகமானதென்றாகக் கருதப்படுவதில்லை. தியாகம் என்பது பழித்துப் பேசப்படுகிறது. அர்ப்பணிப்பு என்பது அஞ்சப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், கடின உழைப்பையும் துன்பங்களையும் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளாமல், இளையோரால் பொறுப்புள்ள குடிமக்களாகவோ, நம்பிக்கையுள்ள நம்பிக்கையாளர்களாகவோ, அர்ப்பணிப்புள்ள தம்பதியராகவோ, நேர்மையான தலைவர்களாகவோ அல்லது சமூகத்தின் இரக்கமுள்ள பணியாளர்களாகவோ மாறமுடியாது.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)