திருத்தந்தை
லியோ, ஆங்கிலேய இறையியலாளர் ஜான் ஹென்றி நியூமனுக்கு ‘திரு அவையின் மறைவல்லுநர்’ (டாக்டர்
ஆஃப் தி சர்ச்) என்ற
பட்டத்தை வழங்கி சிறப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நியூமன் கிறித்தவ இறையியல் மற்றும் போதனையில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர் எனவும் திருத்தந்தை லியோ அவரைப் பாராட்டியுள்ளார். சிறந்த எழுத்தாளரான இவருக்குக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் அருளாளர் பட்டம் வழங்கினார். அதனைத்
தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.
1801-ஆம் ஆண்டு
பிப்ரவரி 21-ஆம் தேதி இலண்டனில் பிறந்த நியூமன், தனது 24-வது வயதில் ஆங்கிலிக்கன் அருள்பணியாளரானார். 1845-ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திரு அவையில் சேர்ந்தார். புகழ்பெற்ற இறையியலாளர் மற்றும் தத்துவ ஞானியான இவர், திருத்தந்தை லியோ அவர்களால் கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.
இத்தகைய
சிறப்பு மிக்க நியூமனின் வாழ்க்கை ‘இதயம் இதயத்துடன் பேசும்’ எனும் வசனத்தில் வெளிப்பட்டது என, புனித பான்ஸ் டி சேல்ஸ் கூறியதையும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.